பட்ஜெட் 2014 -2015 பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு… Continue reading பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!
வகை: சேமிப்பது எப்படி?
வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி?
நிதி ஆலோசனை - வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் காயத்ரி நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள்! எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா? தனிநபர் ஒருவர்… Continue reading வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி?
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!
சேமிப்பு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டு (நிரந்தர வைப்பீடு)க்கு அதிகபட்சம் 9.5% வட்டி தரப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 9 %வட்டியும் ஒரு வருடத்திலிருந்து 24 மாதங்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 10 % வட்டியும் அளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 10.50 சதவிகித வட்டியை அளிக்கிறது. அதோடு நகைக்கடனை 13. 50 %க்கும் அடமான கடனை 14 % வட்டியிலும் தருகிறது. மேலதிக தகவல்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி… Continue reading ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!
டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!
சேமிப்பு- நிதி திட்டமிடல் பாதுகாப்புக்குரிய முதலீடாக மக்களால் என்றும் நம்பிக்கைக்குரியவை வங்கிகள் வழங்கும் டெபாசிட் திட்டங்கள். வட்டி அதிகபட்சம்(300 நாட்களுக்கு மேல்) 9 சதவீதமே கிடைத்தாலும் இதில் சேமிப்பதை விரும்புகிறார்கள். இதில் சில வங்கிகள் ஒருசில சதவிகிதம் அதிக வட்டியைத் தருவதுண்டு. மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியான யூகோ பேங்க் வைப்பு நிதிக்கு (டெபாசிட்) குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு 9.05 % வட்டியை அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச தொகை ரூ.5000 அதிகபட்ச வரம்பு ரூ. 5 கோடி. குறுகிய காலத்துக்கு மட்டுமே… Continue reading டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!
சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்!
நம் எல்லோருக்குமே இருக்கும் கனவு தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளில் புது பட்டுப் புடவை வாங்கி அணிய வேண்டும் என்பதுதான். விற்கிற விலைவாசியில் ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து பட்டுப் புடவை வாங்குவதென்றால் மனசு பதைக்கத்தான் செய்யும். பல சமயங்களில் பர்ஸும் கடிக்கத்தான் செய்யும்! சிறுக சீட்டுப் போட்டு நகை வாங்குவதுபோல் சிறுக சேமித்து பட்டுப் புடவை வாங்கலாம். சில வருடங்களுக்கு முன்புவரை பிரபல ஜவுளிக்கடைகள் மாதந்திர சேமிப்புத் திட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஆனால்… Continue reading சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்!