எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, செய்து பாருங்கள்

ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி!

ஓட்டுத்தையலே ஜப்பானில் சில மாற்றங்களுடன் சஷிகோ எம்பிராய்டரி என அழைக்கப்படுகிறது. ஜப்பானில் இண்டிகோ சாயம்(இண்டிகோ செடிகளிலிருந்து பெறப்படும் நீல நிற சாயம்) பயன்படுத்தப்படுத்தி உருவாக்கும் துணிகளில் வெள்ளை நூலைக்கொண்டு பூத்தையல் போடுவதே சஷிகோ எம்பிராய்டரி! வீட்டை விட்டு வெளிவரமுடியாத பனிக்காலங்களில் ஜப்பானிய விவசாயக் குடிகள் சஷிகோ எம்பிராய்டரியை போடுவார்கள். இப்போது உலகம் முழுக்கவும் சஷிகோ எம்பிராய்டரி பிரபலமாகிவிட்டது. இதில் ஜியோமெட்ரிகல் டிசைன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு எளிமையான சஷிகோ எம்பிராய்டரி டிசைன் போட்டுப் பார்ப்போம். இண்டிகோ துணிக்கு… Continue reading ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி!

Advertisements
சமையல், செய்து பாருங்கள்

கருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்: கருப்பட்டி - 200 கிராம் கம்பு சேமியா -150 கிராம். தண்ணீர் - கால் லிட்டர் நெய் - 3 டேபிஸ் ஸ்பூன் முந்திரி - 10 ஏலக்காய் - ஒரு சிட்டிகை எப்படி செய்வது? கம்பு சேமியாவை வறுக்கத் தேவையில்லை; தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் போதுமானது. வெல்லத்தை, கால் லிட்டர் தண்ணீரில் கரைத்து, கொதிக்க வெயுங்கள். கொதிக்க வைத்ததை ஆறவைத்து, கல், மண் நீங்க வடிகட்டுங்கள். ஒரு கடாயில் நெய் விட்டு,… Continue reading கருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது?

செய்து பாருங்கள்

காகித கைவினைஞர்!

கைவினை கலைகளை அறிவியல் ரீதியாகவும் அர்ப்பணிப்போடும் அணுகும் கைவினைஞர் நம்மிடையே மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அத்தகையவர்களில் காகித கைவினைஞர் தியாக சேகருக்கு தனித்த இடத்தை தரலாம்! பேப்பர் ஆர்ட் என்னும் காகித கலைகளில் ஒரிகாமி என்னும் காகிதம் மடிக்கும், க்வில்லிங் எனப்படும் காகிதம் சுருட்டும் கலை, கிரிகாமி எனப்படும் காகிதம் வெட்டும் கலை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் தியாக சேகர். ஒரிகாமியில் 500 வகைகளுக்கும் அதிகமான டிசைன்களை செய்யக்கூடியவர் . தன்னுடைய நிபுணத்துவத்தை பரப்பும் முயற்சியாக தமிழக… Continue reading காகித கைவினைஞர்!

செய்து பாருங்கள்

நீங்களும் செய்யலாம் சாக்லேட் பொக்கே!

சாக்லேட் மேக்கிங் பலருக்கு இனிப்பான பார்ட் டைம் வேலையாக உள்ளது. சென்னையைச் சேர்ந்த வனிதா பிரவுக்கும் அப்படியே. எதேச்சையாக கற்றுக்கொள்ள ஆரம்பித்து, ஹாபியாக செய்யத் தொடங்கி, இன்று புரபஷனலாக சாக்லேட்டுகளை செய்து சூப்பர் மார்கெட், பேக்கரிகளுக்கு கொடுத்துவருகிறார். சாக்லேட் பொக்கேக்களை அதிகமாக செய்து தருவதாக சொல்கிறார் வனிதா. தன்னுடைய ஸ்பெஷலான கைத்திறனை நமக்காக இங்கே கற்றுத்தருகிறார். என்னென்ன தேவை? கலர் பேப்பர் சுற்றிய சாக்லேட்டுகள் - 10 பலூன் குச்சிகள் - 10 கத்திரிகோல் - 1… Continue reading நீங்களும் செய்யலாம் சாக்லேட் பொக்கே!

எம்பிராய்டரி, செய்து பாருங்கள்

எம்பிராய்டரி: லெய்சி டெய்சி தையல் போடுவது எப்படி?

பூ டிசைனை போடுவதற்கு ஏற்ற எம்பிராய்டரி இந்த லெய்சி டெய்சி தையல். கொடுத்து இருக்கும் பூ டிசைனை உங்களுக்கு விருப்பமான துணியில் வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் நூலைக் கோர்த்து, துணியின் கீழிருந்து குத்தி, டிசைன் கோட்டின் மேலே இழுத்துக் கொள்ளுங்கள். மேலிழுத்த நூலை இடது கைப் பெருவிரலால் துணியோடு அழுந்தப் பிடித்தவாறே, முதலில் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் ஊசியைக் குத்தி , டிசைன் கோட்டிலேயே சிறிது இடைவெளி விட்டு ஊசியை வெளியே இழுக்க வேண்டும். அப்படி இழுத்தால்… Continue reading எம்பிராய்டரி: லெய்சி டெய்சி தையல் போடுவது எப்படி?