சிறப்பு கட்டுரைகள்

ஆடு தாண்டும் காவிரி!

ஜி. விஜயபத்மா "எனக்கும் காவிரிக்குமான உறவு" மிகவும் ஆத்மார்த்தமானது. என் அப்பாவின் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் மாயவரம் பக்கத்தில் உள்ள சின்னகிராமம் "செம்போன்னார் கோவில்". அந்த சின்ன கிராமத்தில் மெயின்ரோடில் ஆரம்பிக்கும் வீடு முடியும் இடம் காவிரி ஆற்றில்.! காவிரி ஆற்றை ஒட்டி எங்கள் வயல்கள். அதாவது எங்கள் தோட்டத்தில் ஓடுகிறது காவேரி. சொல்லும்போதே எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில் எங்கள் தோட்டத்தில் ஓடும் காவிரியின் குறுக்கு வெட்டு இரண்டறை அடி வாய்க்கால் அளவுதான்… Continue reading ஆடு தாண்டும் காவிரி!

அரசியல், சிறப்பு கட்டுரைகள்

இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்!

அமுதா சுரேஷ் சாதிவெறி, மதவெறியை அடுத்து இனவெறி, மொழி வெறித் தலைவிரித்தாடுகிறது! எதில் அரசியல் சேர்ந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே, சில கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கினால், அதற்காக இங்கே இருக்கும் கன்னடர்களைத் தாக்குவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான்! காதல் என்றால், ஒருவன் உள்ளே நுழைகிறான், சாதிப்பெயரில் காதலர்களைச் கொலை செய்கிறான், அவனைத் தூக்கி வைத்து அந்தச் சமூகம் கொண்டாடுகிறது, அவன் கொலையாளியில் இருந்து சாதிக் சங்க தலைவன் ஆகிறான், அப்படியே அவன் அரசியலில்… Continue reading இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்!

சிறப்பு கட்டுரைகள்

கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை!

ஆஸியெனும் அதிசயத்தீவு – 3 (வல்லபி) கீதா மதிவாணன் கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இதோ அந்தக் கதை! மிகவும் இளகிய மனம் படைத்த கங்காரு ஒன்றும் அதன் குட்டியும் ஒரு காட்டில் வசித்துவந்தார்களாம். கங்காருவின் குட்டி சரியான வாலுக்குட்டியாம். அது ஒரு இடத்தில் இல்லாமல் எங்காவது ஓடிக்கொண்டே இருக்க, அம்மா வேட்டைக்காரர்களிடமிருந்தும் மற்ற எதிரிகளிடமிருந்தும் அதைக் காப்பாற்ற அதன் பின்னால் ஓடிக்கொண்டே இருக்குமாம். எத்தனை முறை எடுத்துச்சொன்னாலும் குட்டி அம்மா… Continue reading கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை!

சிறப்பு கட்டுரைகள், பெண், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

கவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்!

எழுத்தாளர் சுகிர்தராணி திரைப்படம் இயக்கும் இயக்குநர்களுக்கு ஆசிரியர்களை இவ்வாறு மோசமாக சித்தரிப்பது அதுவும் நகைச்சுவைக்காக என்னும் மனநிலை எவ்வாறு வாய்க்கிறது என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் தமிழாசிரியர்களும் ஆசிரியைகளும் இயல்புக்கு மாறானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். பேராசிரியர்கள் என்றால் சிடுமூஞ்சிகளாகவும், கரும்பலகையில் கணக்குப் போடத் தெரியாமல் விழிபிதுங்கி அசடுவழிபவர்களாகவும், முழுக்கால்சட்டை அணிந்தவர்கள் எனில் ஜிப் போட மறந்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். தமிழாசிரியர்கள் என்றால் அப்பாத்திரங்களில் நடிக்கவைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களே. அர்த்தமற்ற பேச்சுகள், கெக்கே பிக்கே சிரிப்பு, அசட்டுத்தனமான… Continue reading கவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்!

இன்றைய முதன்மை செய்திகள், சிறப்பு கட்டுரைகள், பணிபுரியும் பெண்கள், பெண், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்ணியம்

பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே!

சிறப்புக் கட்டுரை ஞா.கலையரசி கண்ணாடிக்கூரை (GLASS CEILING) என்றால் என்ன? மிகப் பெரிய வணிக நிறுவனங்களிலும், பன்னாட்டுக் கம்பெனிகளிலும் மிக உயர்ந்த நிர்வாகப் பதவிகளுக்கான ஏணியில், பெண்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும்,  சாதனையாளர்களாக இருந்தாலும் பாதிக்கு  மேல் ஆண்களுக்கிணையாக  ஏற முடியாமல், தடுக்கும் சுவரைத் தான், கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.இதனைத் தடுப்புச்சுவர் அல்லது முட்டுக்கட்டை என்றும் பொருள் கொள்ளலாம். 1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம், மிஸ்… Continue reading பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே!