சினிமா, சின்னத்திரை, தொலைக்காட்சி தொடர்கள்

அமலா நடிக்கும் உயிர்மெய் தொடரில் அதிரடி மாற்றங்கள்!

உயிரும் மெய்யும் கலந்ததுதான் நம் மனித வாழ்க்கை. நமது உடலுக்கு உபாதைகள் வரும் போது உயிருக்கு ஆபத்து இல்லாமல் மருத்துவம் செய்து காப்பாற்றுவது டாக்டர்களின் கடமை. அந்த டாக்டர்களின் வாழ்விலும், தொழிலிலும் வரும் பிரச்னைகளை அவர்கள் எப்படி வெற்றி கொள்கிறார்கள் என்பதை சொல்கிற உயிர் மெய் தொடர்.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமலாவின் நடிப்பில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான இந்தத் தொடர்  வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இரவு 7 மணிக்கு ஒளிப்பரபாகவுள்ளது. இயக்குநர்… Continue reading அமலா நடிக்கும் உயிர்மெய் தொடரில் அதிரடி மாற்றங்கள்!

இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம், சின்னத்திரை, தமிழ்நாடு

இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ்

மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்படும் நிலையில், தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் டிவி என்ற தொலைக்காட்சியில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். 31 வயதாகும் பத்மினி பிரகாஷ் என்ற இந்தத் திருநங்கை கடந்த ஒரு மாதமாக இந்தத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிவருகிறார். தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை, திருநங்கைகள் திரையில் வருவது என்பது புதிதல்ல. ஏற்கனவே ரோஸ் என்ற திருநங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியுள்ளார். ஆனால் செய்தித் தொலைக்காட்சியில் ஒருவர்… Continue reading இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ்

சின்னத்திரை, தொலைக்காட்சி நிகழ்வுகள்

புதிய தலைமுறையிலிருந்து பனிமலர் விலகல்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்களில் பூங்குழலி , ராஜி, பனிமலர் இவர்களைத் தவிர சில பெண்கள் ஸ்டைலாக வாசிக்கிறேன் என்கிற பெயரில் வாயைக் கோணலாக வைத்துக் கொண்டு செய்து வாசிப்பது சகிக்கவில்லை. பெயர் குறிப்பிட்டு அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. நான்கைந்து பேர் அப்படித்தான் வாசிக்கிறார்கள். வாய்க்குள் ஏதோ அடைத்துக்கொண்டு வாசிப்பது போல பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை தரும் இந்த பாணியை கைவிட்டால் வரவேற்கலாம். பொதிகையில் அழகான உச்சரிப்பில் செய்தி வாசிக்கும் பெண்களை பார்க்கும்போது உண்மையில் அவர்கள்மேல்… Continue reading புதிய தலைமுறையிலிருந்து பனிமலர் விலகல்

சினிமா, சின்னத்திரை, தொலைக்காட்சி நிகழ்வுகள்

நடிகை அமலாவின் சீரியல் எண்ட்ரி!

80களின் கதாநாயகியாக நடித்த தென்னிந்திய நடிகை அமலா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் உயிர்மெய் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் மருத்துவராக நடிக்கிறார் அமலா. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அமலா, தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை. ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலான, விலங்குகள் நல ஆர்வலரும்கூட.

சினிமா, சின்னத்திரை

மா.க.பா ஆனந்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

பஞ்சுமிட்டாய் படத்தில் முதன்மை காதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மா.க.பா. ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இருவரும் விஜய் டிவியில் பணியாற்றியவர்கள் என்ற முறையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பஞ்சுமிட்டாய் படத்தின் இசைவெளியீட்டுக்காகவும் மா.க.பா.ஆனந்துக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.பி.மோகன் இயக்கியுள்ளார்.