சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பெயர் வந்தது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், தக்காளி ரசம், பாரம்பரிய ரெசிபி

பருப்புருண்டை ரசம்!

ருசி காமாட்சி மகாலிங்கம் பருப்புருண்டைக் குழம்பு என்று சொல்பவரா நீங்கள்?  எது சொன்னாலும் பரவாயில்லை. அதற்கேற்ப ருசியைமாற்றிஅமைத்துவிடலாம்.கிராமத்து சமையல்தானிதுவும். துவரம்பருப்பு கடையில் வாங்குகிறோமே அதை  வீட்டிலேயே ஒரு வருசத்திற்கு வேண்டியதை  தயாரிப்பது வழக்கம். துவரை வாங்கி முளைகட்டி, ஊறவைத்து, காயவைத்து, உடைத்து என ஒரு ஒர்க் ஷாப்பே செயல்படும். இந்நாளில் முளைகட்டி ஸ்ப்ரவுட்ஸ் என வழங்கப் படுவதை துவரையை பருப்பாக செய்யுமுன்னரே அதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மொத்தமாக துவரையை வாங்கி ஊற வைப்பார்கள். இரவு தண்ணீரை வடித்துவிட்டு … Continue reading பருப்புருண்டை ரசம்!

Advertisements
சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பொடி, வெந்தயக் கீரை சாம்பார்

இன்றைய ஸ்பெஷல் – வெந்தயக் கீரை சாம்பார்

இது அவரைக்காயும் வெந்தயக்கீரையையும் சேர்த்து செய்யும் சாம்பார். அறைத்து விட்டு செய்யலாம். வேண்டியவைகள்: சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக்கீரை - 3 கப் காம்பு நீக்கி இரண்டாக நறுக்கிய அவரைக்காய் - 10 பச்சை மிளகாய் - 2 வறுத்தரைக்க தனியா - 2 டீஸ்பூன் மிளகாய் - 4 கடலைப் பருப்பு–1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப் தாளிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு, பெருங்காயம் ருசிக்கு உப்பு துவரம்… Continue reading இன்றைய ஸ்பெஷல் – வெந்தயக் கீரை சாம்பார்

கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன், காமாட்சி, காராமணி, சமையல், சாம்பார் செய்வது எப்படி?, விருந்து சமையல்

கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன்

விருந்து சமையல்விருந்து சமையலில்,  பருப்பு உசிலி, வாழைக்காய் கறி அவியல் முதலானது செய்திருக்கிறோம். கலத்திற்கு பருப்பு ஒன்றும் பிரமாதமில்லை. வெந்தபருப்பில் திட்டமாக உப்பு சேர்த்து, துளி மஞ்சள்பொடி சேர்த்து,சற்று நெகிழ்வாக வைத்தால் போதும். இலை போட்டுப் பரிமாறும் போது அரைத்துவிட்டுச் செய்த,  பிட்லையோ, ரசவாங்கியோ  செய்து பரிமாறுவது வழக்கம்.   சாதாரணமாக   சாம்பார் எப்போதும் சாப்பிடும் வழக்கம்.. சற்று மாறுதல். இந்த அரைத்து விட்ட வகைகளில். சற்று  கெட்டியாகச் செய்வதால் இலையில் ஓடாது கலந்து சாப்பிட  சுலபமாக இருக்கும்.… Continue reading கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன்

அவியல், சமையல், சாம்பார் செய்வது எப்படி?, பாலக்காட்டு சமையல், ருசியுங்கள்

மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!

அண்டை வீட்டு அவியலைப் பார்ப்போம் வாருங்கள். கல்யாண விருந்துகளில் அவியலுக்கு ஒரு தனியிடமுண்டு. எங்கள் வீட்டில் வழக்கமில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது பாலக்காட்டு சமையல். நாம் அதை ரசித்து ருசிப்பதால் அதுவும் பிரதான இடத்தைப் பெற்று விட்டது.  நல்ல நாட்டு காய்கறிகளைக் கொண்டே அவியல் செய்கிறோம். வருஷ முழுதும் கிடைக்கும்,  காய்கறிகளான பூசணி,பறங்கி, முருங்கை, வாழைக்காய், சேனைக்கிழங்கு முதலிய ஐந்தும் இன்றியமையாதது. அவியலுக்கு ஆகாத கஷ்ணமில்லை என்ற ஒரு வாக்கியமும் உண்டு. காய் என்பது, கஷ்ணம்.… Continue reading மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!

சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பாரம்பரிய ரெசிபி, ருசியுங்கள்

சாம்பாருக்கு எந்த காய் சிறந்தது?

சென்ற வாரம் சாம்பார் பொடி செய்யச் சொல்லித் தந்தேன். சாம்பார் பொடி செய்து விட்டு இதை எழுதாது விடலாமா? சாம்பாருக்கு எந்த காய்கள் சிறந்தது என்று சொல்கிறேன். 1. வெந்தயக்கீரையும் அவரைக்காயும். 2. கேரட், கேப்ஸிகம், தக்காளிப்பழம் 3. முள்ளங்கி, வெங்காயம். 4. முருங்கை, வெங்காயம், முருங்கை தனியாகவும் சேர்த்தும் சமைக்கலாம் 5. வெண்டை, தக்காளி, கேப்ஸிகம், பச்சைமிளகாய் 6. பாலக்கீரை, வெங்காயம் 7. பறங்கிக்காய், பச்சைமிளகாய் 8. பூசணி, கத்தரிக்காய், பச்சை மிளகாய் 9. சுரைக்காய்… Continue reading சாம்பாருக்கு எந்த காய் சிறந்தது?