கோலம், கோலம் போடுவது எப்படி

பூக்கூடை கோலம்!

புள்ளிக் கோலங்கள் நான்கு பூக்கூடைகள் இணைந்தது போன்ற இந்த கோலம் மிக அழகாக உருவாக்கப் பட்டிருக்கிறது. எட்டுப் புள்ளி எட்டு வரிசை நேர்ப்புள்ளியாக வைத்து, நான்கு பக்கமும் படத்தில் உள்ளதுபோல் புள்ளி வையுங்கள். இந்தக் கோலத்தைப் போட்டு முடித்து விட்டு கோலத்தைச் சுற்றிலும் ஒரு வரிசை புள்ளி வைத்து பார்டர் கோலத்தைப் போடுங்கள்.

Advertisements
கோலம், கோலம் போடுவது எப்படி

ஊஞ்சல் கோலம்!

ஊஞ்சல் கோலம் எளிமையான ஊஞ்சல் கோலம் இது. படத்தைப் பார்த்து புள்ளி வைத்து இணைக்கவும்.

கோலம், கோலம் போடுவது எப்படி, புள்ளிக் கோலம்

துளசி மாட கோலம்!

புள்ளிக் கோலங்கள் முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் துளசி மாட கோலம் பூஜையறையை அலங்கரிக்கும். இன்று ஸ்டிக்கர் கோலங்கள்தான் அலங்கரிக்கின்றன. நீங்கள் புள்ளி வைத்து துளசி மாட கோலம் போட விரும்பினால், இதோ ஒரு மாதிரி கோலம். இந்தக் கோலம் போட 15 புள்ளி நேர்புள்ளி 5 வரிசை வையுங்கள். மற்ற புள்ளிகளை கோலத்தைப் பார்த்து வையுங்கள்.  

கோலம், மார்கழி கோலம்

மார்கழி கோலங்கள் – கலியாண மேடை கோலம்

மார்கழி கோலங்கள் வரிசை கலியாண மேடை கோலம் மிகவும் புகழ்பெற்றது. அந்த கால திருமணங்களின்போது படிப்படியாக உள்ள திருமண வீடுகளில் இந்தக் கோலம் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். பார்ப்பதற்கு சிக்கலான புள்ளிக்கோலமாக இது தெரிந்தாலும் போடுவது மிகவும் சுலபம். பெட்டிப்பெட்டியாகப் போட்டு அவற்றை இணைக்க வேண்டும், அவ்வளவுதான். கோலத்தைப் பார்த்து புள்ளிகளை வைக்க வேண்டும். 21 புள்ளி நேர்புள்ளி 5வரிசை அதற்கடுத்து அந்தப் பக்கம் இந்தப்பக்கம் 3 புள்ளிகளை விட்டுவிட்டு 13 புள்ளி வைத்து 4 வரிசை வையுங்கள்.… Continue reading மார்கழி கோலங்கள் – கலியாண மேடை கோலம்

கோலம், கோலம் போடுவது எப்படி, மார்கழி கோலம்

மார்கழி கோலங்கள் – பூந்தொட்டி கோலம்!

மார்கழி சிறப்பு கோலங்கள் பூந்தொட்டி கோலம் 17 புள்ளி 9 முடிய இடைப்புள்ளி புள்ளி இடும்போது கிடைமட்டமாக 17 புள்ளிகளை வைத்து மேல், கீழ் பகுதிகளில் சந்து புள்ளிகளை இட்டு 9 புள்ளியில் நிறுத்துங்கள்.