குற்றம், தமிழ்நாடு

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவு நீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலி!

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டி உடைந்ததில் அருகில் இருந்த தொழிலாளர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். வாணியம்பாடி அருகே ராணிப்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலையில் நேற்றிரவு மறு சுழற்சி செய்யும் ஆலையில் உள்ள கழிவு நீர் குழாய் வெடித்தது. அப்போது கழிவு நீர் தொட்டியின் சுற்றுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகே உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் பலியாகினர். பலியானவர்களில் 9 பேர் வட மாநிலங்களைச்… Continue reading ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவு நீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலி!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், குற்றம், தமிழ்நாடு

சிறுசேரி பெண் என்ஜினியர் கொலை வழக்கில் பாலியல் பாலத்கார குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசு தரப்பு

சென்னை சிறுசேரியில் மென்பொருள் பெண் பொறியாளர் கொலை வழக்கில் வடமாநில இளைஞர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. உமாமகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டதால் பிரேதப் பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பதை நிரூபிக்க முடியாததால் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை மட்டும் தள்ளுபடி செய்து, வழிமறித்து கொலை செய்த குற்றத்துக்காக 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ரூ.5… Continue reading சிறுசேரி பெண் என்ஜினியர் கொலை வழக்கில் பாலியல் பாலத்கார குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசு தரப்பு

குற்றம், தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: 2 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் சந்திரா என்ற பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, நீதிமன்ற விசாரணை கோரி அவரது மகள் ராஜகுமாரி வழக்கு தொடர்ந்தார். அதனை சிபிஐ விசாரிக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.… Continue reading காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: 2 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவு

இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்றம், தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் கொலை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆர்.கே பேட்டை அருகே பாறை குட்டையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது கிடந்ததைப் பார்த்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.  முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை… Continue reading திருவள்ளூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் கொலை

குற்றம், தமிழ்நாடு

சென்னையில் பயங்கரம் : தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் பலி

சென்னையை அடுத்த வேளச்சேரியில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். வேளச்சேரியில் இன்று அதிகாலை, குடித்துவிட்டு காரை எடுத்த நபர், காரை தாறுமாறாக ஓட்டியதில் சாலையோரம் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது. இதில், ஒரு கர்பிணிப் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.… Continue reading சென்னையில் பயங்கரம் : தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் பலி