முன்பெல்லாம் ஒரு கலைப் பொருளை செய்தால், அதைச் செய்த நாமே அழகு பார்த்துக் கொண்டிருப்போம். விற்பனைக்கு அனுப்புவது பற்றியெல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. நாம் உருவாக்கிய கலைப் பொருள் போலவே நம்முடைய கனவுகளும் மூலைக்குப் போய்விடும். இந்த சூழல் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. அமைந்தகரையில் இருந்தபடியே நீங்கள் உருவாக்கிய பொருளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ விற்றுவிட முடியும். எப்படி என்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான ஆன்லைன் வர்த்தக மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது etsy.com.… Continue reading உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?
வகை: குரோஷா பின்னல்
எம்பிராய்டரி கற்கலாம் வாங்க!
கிட்டத்தட்ட 70 வயதைத் தொட்ட இந்திராவின் அயராத உழைப்பும் ஆர்வமும் நம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். பல வகையான குரோஷா பின்னல்கள், விதவிதமான எம்பிராய்டரிகள், பெயிண்டிங், தையல் கலை என கைவேலைகளைச் செய்திலும் கற்றுத்தருவதிலும் கைத்தேர்ந்தவர் இந்திரா. அவர் செய்த சிலவற்றைதான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். நமக்காக இவற்றை கற்றுத்தரவும் இருக்கிறார். கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்டவர் இந்திரா. என்றாலும் தன் கணவருக்கு வேலை மாற்றலானதில் 30 வருடங்களாக சென்னை வாசியாக வாழ்ந்துவருகிறார். 6 வயதில் இருந்தே கைவேலைகளில்… Continue reading எம்பிராய்டரி கற்கலாம் வாங்க!