காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், சமையல், செய்து பாருங்கள்

குடைமிளகாயில் சுவையான ஐந்து ரெசிபிகள்!

1. ஸ்டஃப்டு குடமிளகாய் தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ, சேமியா உப்புமா (அ) ரவை உப்புமா (அ) அரிசி உப்புமா - ஒரு கப், சோளமாவு - 3 டேபிள்ஸ்பூன். எப்படி செய்வது? குடமிளகாயின் காம்பை நீக்கி விட்டு, உள்ளே லேசாக கத்தியால் கீறி விதைகளை எடுத்து விடவும். ஒரு டேபிள் ஸ்பூன் உப்புமாவை உள்ளே வைத்து, சோளமாவை கெட்டியாகக் கரைத்து, குடமிளகாயின் மேல்புறத்தில் வைத்து மூடவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை… Continue reading குடைமிளகாயில் சுவையான ஐந்து ரெசிபிகள்!

Advertisements
காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

தேவையானவை: கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன் காய்கறிக்கலவை (எந்தக் காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்) - ஒன்றரை கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்… Continue reading சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறிகளின் வரலாறு – 28 முட்டைகோஸ் போர்த்துக்கீசியர்களால் 14 அல்லது 17ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காய் முட்டைகோஸ். வரலாற்றாசிரியர்கள் முட்டைகோஸின் பிறப்பிடம் பாறை மலைகள் சூழ்ந்த ஐரோப்பிய பிரதேசங்களாக இருக்கலாம் என்கிறார்கள். ஐரோப்பியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறி என்றாலும் இன்று சீனாவுக்கு அடுத்தபடியாக முட்டைகோஸ் விளைச்சலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதேபோன்று இந்திய உணவுகளிலும் முட்டைகோஸ் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எது நல்ல முட்டைகோஸ்? முட்டைகோஸ் விளையும்போது பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது.… Continue reading முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

போர்த்துக்கீசியர் கொண்டுவந்த காலிஃபிளவர்!

காய்கறிகளின் வரலாறு – 27 காலிஃபிளவர் இன்றைய துருக்கியின் ஒரு பகுதியான ஆசியா மைனரை பூர்வீகமாகக் கொண்டது காலிஃபிளவர். கிபி 600களில் இத்தாலியில் பரவி, 16ம் நூற்றாண்டில் மற்ற நாடுகளில் காலிஃபிளவரின் பயன்பாடு பரவியது. போர்த்துக்கீசியர் மூலமாகவே காலிஃபிளவரும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. காலிஃபிளவர், முட்டைகோஸ், பிரக்கோலி மூன்றும் ஒரே இனத்தைச் சேர்ந்த காய்கறிகள். இலைகளுக்குள் தோன்றும் அகன்ற பூவே சமையலுக்கு உகந்ததாக பயன்படுத்தப்படுகிறது. காலிஃபிளவரை தேர்ந்தெடுப்பது எப்படி? காலிஃபிளவரில் வெண்மை, இளம் மஞ்சள்,… Continue reading போர்த்துக்கீசியர் கொண்டுவந்த காலிஃபிளவர்!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 26 பீன்ஸ் தென் அமெரிக்க நாடான பெருவை பூர்விகமாகக் கொண்ட பீன்ஸ், ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பியர்களால் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று பீன்ஸ்.இன்று சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் பீன்ஸை உற்பத்தி செய்கிறது. மலைப் பிரதேசங்களில் விளையும் செடிவகையிலிருந்து கிடைக்கும் இளம் காய்களே உணவில் பயன்படுத்தப்படுகின்றன. சமைக்காமலும் சமைத்தும் இந்தக் காய் உணவாகிறது. சிறந்த பீன்ஸை இனம் காண்பது எப்படி? இளம் காய்களே… Continue reading பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு