கல்வி - வேலைவாய்ப்பு, சமையல், சுயதொழில், தமிழ்நாடு

சாக்லேட், ஐஸ்க்ரீம் தயாரிக்க பயிற்சி!

http://www.youtube.com/watch?v=MxHBb-NwVik தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரிப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை (24.07.2014) நடைபெறவுள்ளது. சுயதொழில் செய்ய விரும்புவோர் சான்றிதழுடன் கூடிய இந்தப் பயிற்சியில் பங்கெடுக்கலாம். இப் பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபெசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி கட்டணம் :… Continue reading சாக்லேட், ஐஸ்க்ரீம் தயாரிக்க பயிற்சி!

கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு

பொறியியல் படிப்பு: கடினமான பாடப் பிரிவுகளை நிராகரிக்கும் மாணவிகள்

தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில்(2014) சேர்வதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. இந்த கலந்தாய்வில் மாணவிகள் அதிகம் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி போன்ற மென்மையான பணி வாய்ப்புள்ள பாடப்பிரிவுகளையே தேர்தெடுத்துள்ளனர். ஆட்டோமொபைல், ஏரோநாடிக், மெக்கானிக் போன்ற கடினமான பாடப் பிரிவுகளை அதிகம் குறைவான எண்ணிக்கையிலே மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல் சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழிப் பாடப் பிரிவில் சேர்வதற்கு மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை. மெக்கானிக் பிரிவில் மொத்தமுள்ள 718 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே மாணவிகள் தமிழ் வழியில் பயில தேர்ந்தெடுத்துள்ளனர்.… Continue reading பொறியியல் படிப்பு: கடினமான பாடப் பிரிவுகளை நிராகரிக்கும் மாணவிகள்

கல்வி - வேலைவாய்ப்பு

ஆபத்துகால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு தொடக்கம்

ஆபத்துகால சேவை (எமர்ஜென்ஸி கேர்) குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு 108 ஆம்புலன்ஸ் இயக்கி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாண்டு கால படிப்பான இதில், ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், ஆபத்தில் இருக்கும் நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கற்பிக்கப்படும். இந்தப் படிப்பில் செயல்முறை வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. நுண்ணுயிரியல் (மைக்ரோபயாலஜி), பி.பார்ம் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இது முழுநேர படிப்பு. மேலும் விவரங்களுக்கு:… Continue reading ஆபத்துகால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு தொடக்கம்

கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா

திரைப்படக் கல்லூரி தொடங்குகிறார் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா, உலக தரத்திற்கு இணையான திரைப்படக் கல்லூரி ஒன்றை சென்னையில் துவக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளதாக பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். பாரதிராஜா 1977ல் பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவருடைய இயக்கத்தில் சென்ற வருடம் அன்னக்கோடி படம் வெளியானது. இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கருத்தம்மா, தாஜ்மகால் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

இணைய பயன்பாடு, இணையம், இந்தியா, கல்வி - வேலைவாய்ப்பு

மத்திய அமைச்சகம் ஆரம்பித்திருக்கும் புதிய வேலை தேடு தளம்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, புதிய வேலை தேடு தளத்தை ஆரம்பித்திருக்கிறது. 150 விதமான பணிகளைச் சார்ந்தோர் தங்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்து பதிவு செய்துகொண்டு அறியலாம். பதிவு இலவசம். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு பதிவு செய்துள்ளோருக்கு பணி கொடுக்கும் என்று இந்தத் துறைக்கான அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார். இணைய முகவரி: http://www.niesbudnaukri.com