அரசியல், கல்வி - வேலைவாய்ப்பு, வணிகம்

ஐ.டி. துறை ஆள்குறைப்பு: 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது சிஸ்கோ

மைக்ரோசாஃப்டில் பணியாற்றும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஐ.டி. துறை ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன ஸ்விட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின்… Continue reading ஐ.டி. துறை ஆள்குறைப்பு: 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது சிஸ்கோ

கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு

25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நுழைவு வகுப்புகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இலவச மற்றும் கட்டாயக்… Continue reading 25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், கல்வி - வேலைவாய்ப்பு

ஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் செய்தி வாசிப்பு பணி!

புதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செய்தி வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு காலியிடங்கள்: 6 வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும்… Continue reading ஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் செய்தி வாசிப்பு பணி!

கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை!

தமிழக அளவில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய / பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/-வீதம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மார்ச் 2014-இல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதி 1173… Continue reading பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை!

இலக்கியம், கல்வி - வேலைவாய்ப்பு

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி:  இலக்கியத்தில் பட்டமேற்படிப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை. பணித் தகுதி: குறைந்தது 5 ஆண்டுகள் இலக்கியத்தில் செம்மைபடுத்தும் அனுபவம்(எடிட்டிங்) இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும் அவசியம். கூடுதல் தகுதி: இலக்கிய ஆய்வு பட்டம் பெற்றவர்கள், இலக்கிய பரிட்சையம் உள்ளவர்கள்,… Continue reading சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!