கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, புற்றுநோய், மருத்துவம்

கண்ணில் பூச்சி பறக்குது!

நோய்நாடி நோய்முதல் நாடி - 38 ரஞ்சனி நாராயணன் முதலில் ஒரு புதிய செய்தியுடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்போம். புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் ஒரு புதிய சாதனை. வளரும் நாடுகளில் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 70% -ஐத் தொடுகிறது. ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிப்பது நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் என்றாலும், இந்நோய் வந்திருப்பதை கண்டறியும் முறைகளான முலை ஊடுகதிர்ப்பட சோதனை (mammogram), பெருங்குடல் அகநோக்கி (colonoscopy)… Continue reading கண்ணில் பூச்சி பறக்குது!

Advertisements
கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கண்பார்வை குறைபாடுகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சைகள்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 30 ரஞ்சனி நாராயணன் ‘காலையில் எழுந்தவுடன் படிப்பு’ என்றார் நம் பாரதி. என்னைப் பொறுத்தவரை காலை எழுந்தவுடன் கண்ணாடி - முகம் பார்க்கும் கண்ணாடி இல்லைங்க.... (அதிகாலையில் ‘பேய்’ முகத்தில் விழிக்கும் எண்ணம் எனக்குக் கிடையாதுங்கோ!) மூக்குக்கண்ணாடி! ஆரம்பத்தில் படிக்கும்போது மட்டுமே பயன்படுத்தி வந்த மூ.கண்ணாடி இப்போது தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் கண்களின் மேலேயே வாசம் செய்கிறது. என்னைபோல பலர் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: LASIK… Continue reading கண்பார்வை குறைபாடுகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சைகள்!

கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, கான்டாக்ட் லென்ஸ்கள், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கான்டாக்ட் லென்ஸ் அணிவது எப்படி?

நோய்நாடி நோய்முதல் நாடி - 28 ரஞ்சனி நாராயணன்     கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணினுள் கண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும்படி பொருத்துப்படுபவை. அதனாலேயே இவற்றுக்கு கான்டாக்ட் (தொடுவில்லைகள்) லென்ஸ்கள் என்ற பெயர் வந்தது. எல்லோருக்கும் பொருந்தும்படியாக இவை இருப்பதில்லை. ஒவ்வொரு தனிநபருக்கும் தகுந்தாற்போல தயாரிக்கப்பட வேண்டும். கண்பார்வைக் கோளாறு எதுவுமில்லை, சும்மா அழகுக்கு அணிய விரும்பினாலும் கூட ஒரு கண்மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் லென்ஸ்களை அணிவதே நல்லது. உங்கள் கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பரிசோதிக்கப்பட்ட பிறகு, எந்தவிதமான … Continue reading கான்டாக்ட் லென்ஸ் அணிவது எப்படி?

கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா? இதை கட்டாயம் படியுங்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 27 ரஞ்சனி நாராயணன்   கான்டாக்ட்  லென்ஸ்கள் எப்படி உபயோகத்துக்கு வந்தன என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த வாரம் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்துவது மென்மையான (soft) லென்ஸ்களா, அல்லது கெட்டியான(hard) லென்ஸ்களா என்பதைப் பொறுத்து சுத்தம் செய்வதும் அமைகிறது. மென்மையான லென்ஸ்கள் வெகு விரைவில் காற்றிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் மாசுகளை இழுத்துக்கொள்ளும். இவை மட்டுமல்ல; நம் கண்ணீரில் இருக்கும்… Continue reading கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா? இதை கட்டாயம் படியுங்கள்!

உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 26 ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம். முதல் செய்தி: உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்மணி பற்றியது. ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள டெல்வாரா என்ற இடத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அம்மாவும் (சந்தோஷ் ராஜ்புத்) பிள்ளையுமாக (கிஷோர்) போகும் வழியில் அவர்களை ஒரு கரடி தாக்கி, அந்தப் பெண்மணியின் ஒரு கண்ணை பிய்த்து எறிந்தது. அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது… Continue reading உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!