கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, புற்றுநோய், மருத்துவம்

கண்ணில் பூச்சி பறக்குது!

நோய்நாடி நோய்முதல் நாடி - 38 ரஞ்சனி நாராயணன் முதலில் ஒரு புதிய செய்தியுடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்போம். புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் ஒரு புதிய சாதனை. வளரும் நாடுகளில் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 70% -ஐத் தொடுகிறது. ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிப்பது நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் என்றாலும், இந்நோய் வந்திருப்பதை கண்டறியும் முறைகளான முலை ஊடுகதிர்ப்பட சோதனை (mammogram), பெருங்குடல் அகநோக்கி (colonoscopy)… Continue reading கண்ணில் பூச்சி பறக்குது!

அறிவியல், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

நீதிபதிகள் அணிந்த குளிர்கண்ணாடிகள்!

நோய்நாடி நோய்முதல்நாடி - 36 ரஞ்சனி நாராயணன் ‘கண்ணாடி’ என்று நாம் பொதுவாகச் சொல்லும் விஷயத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன தெரியுமா? முகம் பார்க்கும் கண்ணாடிகள் - இவற்றில் சில ‘பூதம் காட்டும்’ (நம்மை இல்லீங்கோ!). எங்கள் ஊரில் இருக்கும் சர் விச்வேச்வரையா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் இருக்கும் கண்ணாடிகளை நீங்கள் அவசியம் வந்து பார்க்க வேண்டும். ஒரு வகைக் கண்ணாடிகள் நம்மை பத்து மடங்கு குண்டாகக் காட்டும் (எனக்குப் பிடிக்கவே பிடிக்காது!) சில  மிக மிக ஒல்லியாகக்… Continue reading நீதிபதிகள் அணிந்த குளிர்கண்ணாடிகள்!

உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நோய்நாடி நோய்முதல்நாடி - 35 ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் ஒரு ஆன்மிக கதையுடன் நம் கண் பற்றிய கட்டுரையைத் தொடர்வோம். விசிஷ்டாத்வைதம் என்கிற சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீ இராமானுஜரின் அணுக்கத் தொண்டர் ஸ்ரீ கூரத்தாழ்வான். இவர் காஞ்சீபுரம் அருகில் உள்ள கூரம் என்ற ஊரின் சிற்றசர். ஸ்ரீ இராமானுஜருக்கு தொண்டு செய்துகொண்டு வாழ வேண்டும் என்பதற்காக தனது செல்வம் முழுவதையும் தானம் செய்துவிட்டு ஸ்ரீ இராமானுஜரை சேர்ந்து ஸ்ரீரங்கத்தில் அவருக்குத் தொண்டு செய்து வருகிறார். அப்போது சோழ தேசத்து… Continue reading கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கண்ணீரும் கதை சொல்லும்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 33 ரஞ்சனி நாராயணன் கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. நாம் ஒவ்வொருமுறை கண் சிமிட்டும்போதும், எண்ணெய், சளிபோன்ற திரவம்  இவற்றுடன் தண்ணீரும் சேர்ந்து நம் கண்ணின் மேற்பரப்பில் பரப்பப்பட்டு நம் கண்ணின் ஈரத்தன்மை பராமரிக்கப்படுகிறது. இந்த ஈரத்தன்மை சுமார் 20 நொடிகள் இருக்கும். உலர் கண்கள் இருப்பவர்களுக்கு இந்த ஈரத்தன்மை 5 நொடிகள் மட்டுமே இறக்கும். கண்ணின் மேற்பரப்பில் ஒரு கண்ணீர் திரை மூன்று அடுக்குகளாக இருக்கும் என்று சென்ற… Continue reading கண்ணீரும் கதை சொல்லும்!

அனுபவம், அறிவியல், கண் பாதுகாப்பு, சினிமா, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

நாம் ஏன் அழுகிறோம்?

நோய்நாடி நோய்முதல்நாடி - 32 ரஞ்சனி நாராயணன் ‘கண்ணிலே நீரெதற்கு? காலமெல்லாம் அழுவதற்கு!’ அந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் அழுதார்கள். உண்மையில் கண்ணீர் என்பது நிச்சயம் காலமெல்லாம் அழுவதற்கு அல்ல. நமது கண்களை கழுவுவதற்கும், ஈரத்தன்மையுடன் வைப்பதற்கும், நாம் இமைகளை மூடித் திறக்கும்போது ஏற்படும் உராய்வைத்… Continue reading நாம் ஏன் அழுகிறோம்?