கண்காட்சி, செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு

வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை

கடந்த வாரம் சென்னையில் நடந்த பெண் கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பெண்கள் தங்களுடைய நாளில் சிறு பகுதியை ஒதுக்கி, அதில் தங்களுக்குப் பிடித்த கைவேலைகள் செய்து, அதை விற்கக் கூடிய நிலைக்கு உயர்ந்தவர்களே.  தாங்களும் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவற்றை எப்படி விற்பது யாருக்கு விற்பது என்கிற தயக்கம்தான் பல பெண்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர விடுவதில்லை. இந்த தயக்கத்தை… Continue reading வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை

கண்காட்சி, செய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்

வீட்டை அலங்கரித்தல் – குத்து விளக்குடன் செராமிக் கலைப்பொருட்கள்

சமீபத்தில் சென்னை லலித்கலா அகாடமியில் இந்தோ கொரியன் கலைஞர்களின் செராமிக் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு கலைஞர் குத்துவிளக்கின் அடிப்பாகத்தைப் பயன்படுத்தி மேலே செராமிக்கால் ஆன தட்டுகளால் அலங்கரித்திருந்தார். தட்டின் மேல் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. பார்க்க மிக அருமையாக இருந்தது.

கண்காட்சி, சுற்றுச்சூழல்

“என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா!” – குழந்தையின் அபயக்குரல்

ஞா.கலையரசி புதுவையில் 01/03/2015 முதல் 08/03/2015 வரை ஷில்பதரு (Shilpataru) கலைஞர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த கலைக் கண்காட்சியைக் காணும்  வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்நிகழ்ச்சிக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த கரு, ‘மறுசுழற்சி கலை’ என்பதாகும். நாம் குப்பை என்று தூக்கி வீசும் பொருட்கள், இவர்களின் படைப்புத் திறன் மூலம் கவின்மிகு கலைபடைப்புகளாக உருமாற்றம் பெற்றிருந்தன. நான் பார்த்து வியந்த கலைப் பொருட்களை, நீங்களும் பார்த்து மகிழுங்கள்... வாசலில் எச்.சண்முகம் என்பவர் அடுத்த அடி (Next step) என்ற… Continue reading “என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா!” – குழந்தையின் அபயக்குரல்

கண்காட்சி

உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியப் பெண்கள்!

’’பெண்களின் உள்மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லவே முடியாது என்பார்கள். பெண்களின் உள்மனதை அறிய அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பெண்களின் உணர்வுகளை வகைப்படுத்துவதையும் அவை எந்த வகையில் பெண்களை சமூகத்துடன் பிணைக்கின்றன என்பதையும் ஓவியங்கள் வழியே காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.” என்கிறார் லதா. சென்னை சோழமண்டல ஓவியக் கலைஞரான லதா, ‘பக்தி’ என்கிற தலைப்பில் தன் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். சென்னை தட்சிணசித்ராவில் வரும் ஆகஸ்ட் 20ந் தேதி முதல் 31 வரை இந்த ஓவியக் கண்காட்சி நடக்கவிருக்கிறது.

கண்காட்சி, தட்சிணசித்ரா, பட்டுப்புடவை

நீங்கள் புடைவை பிரியரா?

நவீன உடைகள் பல வந்தாலும் புடைவைக்கு இருக்கும் புகழே தனிதான். புடைவைப் பிரியர்களுக்காகவே தட்சிணசித்ரா, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஆகஸ்ட் 2 மற்றும் 3ந் தேதிகளில் பிரத்யேக கண்காட்சி நடத்துகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற புடைவை வடிவமைப்பாளர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் சென்று பாருங்கள்... காட்சி நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.