எம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தையல் கலை, நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

நீங்களும் பின்னலாம் குரோஷா!

  காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்களான நம் பாட்டியும் தாத்தாவும் தங்களுக்கு ஆடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை! அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று… Continue reading நீங்களும் பின்னலாம் குரோஷா!

Advertisements
எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, செய்து பாருங்கள்

எம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி?

சங்கிலித் தையலை எந்த விதமான டிசைனுக்கும் இந்தத் தையலைப் போடலாம். அதேபோல எந்த விதமான ஆடைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். தேவையானவை: காட்டன் துணி, ஊசி, எம்பிராய்டரி நூல், எம்பிராய்டரி சட்டகம். துணியை எம்பிராய்டரி சட்டகத்துக்குள் பொருத்தவும். ஊசியில் இரட்டை இழையாக நூலைக் கோர்த்துக் கொள்ளுங்கள். டிசைனின் ஆரம்பப் புள்ளியில் ஊசியைக் கீழிருந்து குத்தி மேலே இழுத்துக் கொள்ளுங்கள். மேலிழுத்த நூலை இடது கைப் பெருவிரலால் துணியோடு அழுத்திப் பிடித்தவாறே, முதலில் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் ஊசியைக் குத்தி, அதே வரிசையிலேயே சிறிது… Continue reading எம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி?

எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, தையல் கலை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

எம்பிராய்டரி போடுவோம்: ஓட்டுத் தையலில் ஒரு பூ!

எம்பிராய்டரி போடுவோம் - 1 ஓட்டுத்தையல்(Running stich) மனிதர்கள் நாகரிகமாக உடையணிய ஆரம்பித்தபோது தையல் கலை தோன்றியது. அதாவது இலைகளையும் தழைகளையும் மரப்பட்டைகளையும் கோர்த்து உடைகள் தயாரித்தபோது முதல் தையல் கலைஞன் தோன்றியிருக்கக்கூடும். மிக மிக பழமையான இந்தத் தையல் கலையில் இப்போது எவ்வளவோ மாற்றங்கள். ஆனாலும் கையால் தைக்கப்படும் தையலுக்கு இப்போதும் தனி மகத்துவம் உண்டு. இப்படியோரு மகத்துவமான தையல் கலையில் உள்ள ஏராளமான தையல் வகைகள் பற்றி அறிவதோடு, அதைக் கற்கவும் போகிறோம். எம்பிராய்டரி… Continue reading எம்பிராய்டரி போடுவோம்: ஓட்டுத் தையலில் ஒரு பூ!

ஃபேஷன் ஜுவல்லரி, எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, குரோஷா, குரோஷா பின்னல், செய்து விற்கலாம், தொழில், தொழில் தொடங்க ஆலோசனை, நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே செய்யலாம்

உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?

முன்பெல்லாம் ஒரு கலைப் பொருளை செய்தால், அதைச் செய்த நாமே அழகு பார்த்துக் கொண்டிருப்போம். விற்பனைக்கு அனுப்புவது பற்றியெல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. நாம் உருவாக்கிய கலைப் பொருள் போலவே நம்முடைய கனவுகளும் மூலைக்குப் போய்விடும். இந்த சூழல் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. அமைந்தகரையில் இருந்தபடியே நீங்கள் உருவாக்கிய பொருளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ விற்றுவிட முடியும். எப்படி என்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான ஆன்லைன் வர்த்தக மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது etsy.com.… Continue reading உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?

ஃபேஷன் ஜுவல்லரி, இணைய பயன்பாடு, எம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தரவிறக்கிக் கொள்ள, நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பதக்க மணி மாலை, பிரெஸ்லெட்

யூ டியூப்பில் 4பெண்கள்!

4பெண்கள் தளத்தில் வெளியாகும் சமையல், தையல், மணி கோர்ப்பது, குரோஷா உள்ளிட்ட செய்முறைகளை இனி நீங்கள் யூ டியூப்பிலும் பார்க்கலாம். இப்போதைக்கு முதல் முயற்சியாக ஸ்லைடு ஷோக்களை உருவாக்கியிருக்கிறோம். வரும்காலத்தில் விடியோ காட்சிகள் இடம்பெறும். 4பெண்களை வரவேற்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி... இணைப்பைப் பார்க்க சொடுக்குங்கள்.