எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, செய்து பாருங்கள்

ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி!

ஓட்டுத்தையலே ஜப்பானில் சில மாற்றங்களுடன் சஷிகோ எம்பிராய்டரி என அழைக்கப்படுகிறது. ஜப்பானில் இண்டிகோ சாயம்(இண்டிகோ செடிகளிலிருந்து பெறப்படும் நீல நிற சாயம்) பயன்படுத்தப்படுத்தி உருவாக்கும் துணிகளில் வெள்ளை நூலைக்கொண்டு பூத்தையல் போடுவதே சஷிகோ எம்பிராய்டரி! வீட்டை விட்டு வெளிவரமுடியாத பனிக்காலங்களில் ஜப்பானிய விவசாயக் குடிகள் சஷிகோ எம்பிராய்டரியை போடுவார்கள். இப்போது உலகம் முழுக்கவும் சஷிகோ எம்பிராய்டரி பிரபலமாகிவிட்டது. இதில் ஜியோமெட்ரிகல் டிசைன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு எளிமையான சஷிகோ எம்பிராய்டரி டிசைன் போட்டுப் பார்ப்போம். இண்டிகோ துணிக்கு… Continue reading ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி!

எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, செய்து பாருங்கள்

எம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி?

சங்கிலித் தையலை எந்த விதமான டிசைனுக்கும் இந்தத் தையலைப் போடலாம். அதேபோல எந்த விதமான ஆடைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். தேவையானவை: காட்டன் துணி, ஊசி, எம்பிராய்டரி நூல், எம்பிராய்டரி சட்டகம். துணியை எம்பிராய்டரி சட்டகத்துக்குள் பொருத்தவும். ஊசியில் இரட்டை இழையாக நூலைக் கோர்த்துக் கொள்ளுங்கள். டிசைனின் ஆரம்பப் புள்ளியில் ஊசியைக் கீழிருந்து குத்தி மேலே இழுத்துக் கொள்ளுங்கள். மேலிழுத்த நூலை இடது கைப் பெருவிரலால் துணியோடு அழுத்திப் பிடித்தவாறே, முதலில் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் ஊசியைக் குத்தி, அதே வரிசையிலேயே சிறிது… Continue reading எம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி?

எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, தையல் கலை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

எம்பிராய்டரி போடுவோம்: ஓட்டுத் தையலில் ஒரு பூ!

எம்பிராய்டரி போடுவோம் - 1 ஓட்டுத்தையல்(Running stich) மனிதர்கள் நாகரிகமாக உடையணிய ஆரம்பித்தபோது தையல் கலை தோன்றியது. அதாவது இலைகளையும் தழைகளையும் மரப்பட்டைகளையும் கோர்த்து உடைகள் தயாரித்தபோது முதல் தையல் கலைஞன் தோன்றியிருக்கக்கூடும். மிக மிக பழமையான இந்தத் தையல் கலையில் இப்போது எவ்வளவோ மாற்றங்கள். ஆனாலும் கையால் தைக்கப்படும் தையலுக்கு இப்போதும் தனி மகத்துவம் உண்டு. இப்படியோரு மகத்துவமான தையல் கலையில் உள்ள ஏராளமான தையல் வகைகள் பற்றி அறிவதோடு, அதைக் கற்கவும் போகிறோம். எம்பிராய்டரி… Continue reading எம்பிராய்டரி போடுவோம்: ஓட்டுத் தையலில் ஒரு பூ!

ஃபேஷன் ஜுவல்லரி, எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, குரோஷா, குரோஷா பின்னல், செய்து விற்கலாம், தொழில், தொழில் தொடங்க ஆலோசனை, நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே செய்யலாம்

உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?

முன்பெல்லாம் ஒரு கலைப் பொருளை செய்தால், அதைச் செய்த நாமே அழகு பார்த்துக் கொண்டிருப்போம். விற்பனைக்கு அனுப்புவது பற்றியெல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. நாம் உருவாக்கிய கலைப் பொருள் போலவே நம்முடைய கனவுகளும் மூலைக்குப் போய்விடும். இந்த சூழல் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. அமைந்தகரையில் இருந்தபடியே நீங்கள் உருவாக்கிய பொருளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ விற்றுவிட முடியும். எப்படி என்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான ஆன்லைன் வர்த்தக மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது etsy.com.… Continue reading உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?

எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, குரோஷா பின்னல், தையல் கலை

எம்பிராய்டரி கற்கலாம் வாங்க!

கிட்டத்தட்ட 70 வயதைத் தொட்ட இந்திராவின் அயராத உழைப்பும் ஆர்வமும் நம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். பல வகையான குரோஷா பின்னல்கள், விதவிதமான எம்பிராய்டரிகள், பெயிண்டிங், தையல் கலை என கைவேலைகளைச் செய்திலும் கற்றுத்தருவதிலும் கைத்தேர்ந்தவர் இந்திரா. அவர் செய்த சிலவற்றைதான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். நமக்காக இவற்றை கற்றுத்தரவும் இருக்கிறார். கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்டவர் இந்திரா. என்றாலும் தன் கணவருக்கு வேலை மாற்றலானதில் 30 வருடங்களாக சென்னை வாசியாக வாழ்ந்துவருகிறார். 6 வயதில் இருந்தே  கைவேலைகளில்… Continue reading எம்பிராய்டரி கற்கலாம் வாங்க!