உலகம், மருத்துவம்

எபோலா ஒழிந்தது!

எபோலா என்னும் கொடிய உயிர்க்கொல்லி இரத்த ஒழுக்கு தொற்று நோய் டிசம்பர் 2013 முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. காங்கோவில் உள்ள எபோலா நதிக் கரையில் இருந்து பரவியது என்பதால் எபோலா என்று பெயர் சூட்டப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி சுமார் 5,078 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது சியாரா லியோன் நாடுதான். இதுவரை கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். சரியான மருந்துகள் இல்லாததும் குறைவான… Continue reading எபோலா ஒழிந்தது!

அரசியல், உலகம்

இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு

இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா என சீனா பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதி வருகின்றன். குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள 3 நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை ஒட்டி மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்த அமெரிக்க முயற்சிப்பதாக எழுதியிருந்தன. ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக்க தன்னுடைய நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வருகிறது என்றும் எழுதியிருந்தன. இந்நிலையில், இந்திய குடியரசுத் தினத்தை… Continue reading இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு

அரசியல், உலகம்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய யூனியனின் கட்டுபாடுகள் ரத்து

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய யூனியனின் கட்டுபாடுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை என்பதால் ரத்து செய்யப்படுவதாக ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமின்றி, சில தனி நபர்கள் மீதான கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுவதாக ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்ட உத்தரவு 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு அவசியமெனில், அதுபற்றிய உரிய யோசனைகளை 2… Continue reading விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய யூனியனின் கட்டுபாடுகள் ரத்து

அரசியல், உலகம்

மீண்டும் பயணத்தைத் தொடங்கியது யாழ்தேவி!

இலங்கையில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கு நகரான யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவையை 24 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக தொடங்கிவைத்துள்ளார்.உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 24 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை, யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ரயில் பாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதிய ரயிலின் முதலாவது பயணியாகப் பயணித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் வரவேற்றனர்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு வருகையை முதலமைச்சர்… Continue reading மீண்டும் பயணத்தைத் தொடங்கியது யாழ்தேவி!

இந்தியா, உலகம், சமூகம்

இந்திய காவல்துறை பெண் அதிகாரிக்கு ஐ.நா.வின் அமைதிக் காப்பாளர் விருது

ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் காவல்துறையின் அமைதிக் காப்பாளர் விருது இந்திய காவல்துறை பெண் அதிகாரி சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அமைதிப் பணியில் இணைந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சக்தி தேவி. இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதில் தலைசிறந்த பணியை ஆற்றியதற்காக சக்தி தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.