இலக்கிய விருது, இலக்கியம், சினிமா

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் கதைதான் கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இதுவரை 1லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகி நாவல் உலகத்தில் பெரும் சாதனை செய்திருக்கிறது. லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு அந்நாள்… Continue reading 23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

Advertisements
இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது!

தமிழின் முக்கியமான எழுத்தாளரான கோணங்கிக்கு 2013-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், எம்.ஏ.நுஃமான், பெருமாள் முருகன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. விளக்கு விருது ரூ.50,000… Continue reading எழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது!

இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர்கள் இரா.நடராசன் மற்றும் ஆர். அபிலாஷுக்கு சாகித்ய அகாதமி விருது!

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழகத்தைச் சேர்ந்த இரா. நடராஜன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாகித்ய அகாதமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படும் பால சாகித்ய அகாதமி விருதுக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழில், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கு பால சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து எழுத்தாளர் இரா. நடராசன் பேசும்போது, ‘கடந்த 20… Continue reading எழுத்தாளர்கள் இரா.நடராசன் மற்றும் ஆர். அபிலாஷுக்கு சாகித்ய அகாதமி விருது!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

உலக புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்ற அரசிய‌ல் விமர்சகருமான‌ யூ.ஆர்.அனந்தமூர்த்தி (81) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவ‌ர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அருகேயுள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலச்சார்ய அனந்த் மூர்த்தி, இந்துமத… Continue reading எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

இலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு, விருது

ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிஜந்தன் எழுதிய என் பெயர், ஏக்நாத் எழுதிய கொடை காடு ஆகிய நாவல்கள் ஜெயந்தன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நாவலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய நரிக்கொம்பு நாவலுக்கும், புதிய மாதவி எழுதிய பெண் வழிபாடு, ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் ஆகிய நூல்கள்… Continue reading ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!