இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்?

செல்வ களஞ்சியமே -94 ரஞ்சனி நாராயணன் பிறந்த நாள் என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய நாள்.அதுவும் குழந்தைகளுக்கு தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவது ரொம்பவும் குஷியைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி. பள்ளிக்கு இனிப்புகள் அல்லது சாக்லேட்டுகள் வாங்கி எடுத்துபோவது, அன்று ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு புது உடை உடுத்துக் கொண்டு போவது என்று வானில் பறக்கும் மனநிலையில் இருப்பார்கள். ஒருகாலத்தில், மாலை வேளையில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கமும் சிலரிடம் இருந்தது. ஒரு குழந்தையை சந்தோஷப்படுத்துவது என்பதற்காகவே… Continue reading பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்?

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்

சித்திரை சமையல் தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப் இனிப்பான மாம்பழம் - 2 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு மிளகாய்தூள் - இரண்டரை தேக்கரண்டி தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - 3… Continue reading சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

உங்கள் குழந்தை மூடி டைப்பா?!

செல்வ களஞ்சியமே- 93 ரஞ்சனி நாராயணன் சில குழந்தைகள் எல்லோருடனும் சுலபமாகப் பழகுகின்றன. சில வெளி மனிதர்களைப் பார்த்தால் அம்மாவின் பின்னாலோ அப்பாவின் பின்னாலோ போய் ஒளிந்து கொள்ளும். சிறு குழந்தையாய் இருக்கும்போது பரவாயில்லை. இதே கூச்ச சுபாவம் பெரியவனாக ஆன பின்பும் தொடர்ந்தால் குழந்தைக்கே அது நல்லதல்ல. அம்மாவோ அப்பாவோ தனிமை விரும்பியாக இருந்தால் குழந்தையும் அப்படி இருக்கலாம். சில பெற்றோர்கள் ‘என் பெண் மூடி டைப். யாருடனும் பேசமாட்டாள்’ என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள்.… Continue reading உங்கள் குழந்தை மூடி டைப்பா?!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஆந்திர காவல்துறையால் கொல்லப்பட்ட 20 தமிழர்கள்: முழு பின்னணி

ஆந்திர காவல்துறையின் "என்கவுன்டரில்" கொல்லப்பட்ட 20 தமிழர்கள் -  உண்மை அறியும் குழு அறிக்கை - 2 இதன் முந்தைய பதிவு இங்கே... ஒரு இயற்கை வளப் பாதுகாப்புச் செயல்பாடு சமூக அரசியல் பிரச்சினையாக மாறிய கதை திருப்பதிமற்றும் கடப்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ள இந்த செஞ்சந்தன மரங்கள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. நெல்லூர், கர்நூல் மாவட்டங்களிலும் இவை சிறிதளவு உண்டு. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் எனவும் இது கூறப்படுகிறது.… Continue reading ஆந்திர காவல்துறையால் கொல்லப்பட்ட 20 தமிழர்கள்: முழு பின்னணி

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம், புத்தகம்

“முட்டையிலிருந்து என்ன வரும்?”

ஞா.கலையரசி காட்டுயிர் எழுத்தாளர் திரு சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘வானில் பறக்கும் புள்ளெலாம்,’ நூலை அண்மையில் வாசித்தேன்.  உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  உயிர்மை வெளியீடு. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2014. இவர் காட்டுயிர், சூழலியல், திரைப்பட வரலாறு ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்.  சூழலியல் வரிசையில் இது  இவருடைய மூன்றாவது நூல். ஒரு முறை ஆறு வயது சிறுமியிடம் முட்டையைக் காட்டி,  “முட்டையிலிருந்து என்ன… Continue reading “முட்டையிலிருந்து என்ன வரும்?”