மேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது. ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில்… Continue reading பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்
Category: இதழ்
4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…
வழமையாக பெண்களுக்கான இதழ்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே 4 பெண்கள் தளம் தொடங்கப்பட்டது. ஆர்வத்தின் காரணமாக அவசர அவசரமாக சரியான நிலைப்பாட்டில் 4 பெண்கள் தளம் இதுநாள் வரை செயல்படவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறோம். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்கிற புரிதலுக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது, இந்தக் காலக்கட்டத்தில் வெகுஜென பெண்கள் இதழ்களுக்கும் தீவிர பெண்ணியத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இடைவெளி பற்றி நாம் அதிகம் விவாதிக்காததும் இந்த இடைவெளியை நீக்க எத்தகைய இணைப்பு நடவடிக்கை தேவை என்பதையும் சிந்திக்க முடிந்தது.… Continue reading 4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…