இணைய பயன்பாடு, இணையம், இந்தியா, கல்வி - வேலைவாய்ப்பு

மத்திய அமைச்சகம் ஆரம்பித்திருக்கும் புதிய வேலை தேடு தளம்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, புதிய வேலை தேடு தளத்தை ஆரம்பித்திருக்கிறது. 150 விதமான பணிகளைச் சார்ந்தோர் தங்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்து பதிவு செய்துகொண்டு அறியலாம். பதிவு இலவசம். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு பதிவு செய்துள்ளோருக்கு பணி கொடுக்கும் என்று இந்தத் துறைக்கான அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார். இணைய முகவரி: http://www.niesbudnaukri.com

அறிவியல்/தொழிற்நுட்பம், இணைய பயன்பாடு, இணையம்

முன்னோடி சமூக வலைதளமான ஆர்குட் சேவை நிறுத்தம்

சமூக வலைதளங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய ஆர்குட் தன் சேவையை வரும் செப்டம்பர் 30ந்தேதி தன்னுடைய பயணத்தை நிறுத்த இருக்கிறது. இணைய நிறுவனமான கூகுளுக்குச் சொந்தமான ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வருகையால் சுணக்கம் கண்டது. இதையடுத்து கூகுள் பிளஸ் சேவையை அறிமுகப்படுத்திய கூகுள். ஆர்குட் தளத்துக்கு வரவேற்பு இல்லாத சூழலில் அதை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது கூகுள் நிறுவனம். ஆர்குட் என்ற பெயர் இந்த தளத்தை வடிவமைத்தவரின் பெயரான Orkut Buyukkokten என்பதிலிருந்து பெறப்பட்டது.

இணைய பயன்பாடு, இணையம், சினிமா

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக இணையத்தில் படம் வெளியிடுகிறது ஏவிஎம்!

176 படங்களைத் தயாரித்த இந்தியாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம், இணையத்தின் வீச்சை புரிந்து கொண்டு இணையத்தில் வெளியிடுவதற்கென்றே இதுவும் கடந்து போகும் என்ற 55 நிமிட படத்தை தயாரித்துள்ளது. ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த எம்.எஸ்.குகனின் மகள்களான அருணா, அபர்ணா இருவரும் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். குறும்படங்களை இயக்கிய ஸ்ரீஹரி பிரபாகரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சிவாஜி தேவ்,ஷில்பா பட் கதைநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக இது இருக்கும் என்கிறார்கள் இந்த சகோதரிகள்.… Continue reading இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக இணையத்தில் படம் வெளியிடுகிறது ஏவிஎம்!

இணைய பயன்பாடு, இணையம்

இன்றைய கூகிள் டூடுல்!

இன்றைய கூகிள் டூடுல்! இன்றைய கூகிள் டூடுல்!

ஃபேஷன் ஜுவல்லரி, இணைய பயன்பாடு, எம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தரவிறக்கிக் கொள்ள, நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பதக்க மணி மாலை, பிரெஸ்லெட்

யூ டியூப்பில் 4பெண்கள்!

4பெண்கள் தளத்தில் வெளியாகும் சமையல், தையல், மணி கோர்ப்பது, குரோஷா உள்ளிட்ட செய்முறைகளை இனி நீங்கள் யூ டியூப்பிலும் பார்க்கலாம். இப்போதைக்கு முதல் முயற்சியாக ஸ்லைடு ஷோக்களை உருவாக்கியிருக்கிறோம். வரும்காலத்தில் விடியோ காட்சிகள் இடம்பெறும். 4பெண்களை வரவேற்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி... இணைப்பைப் பார்க்க சொடுக்குங்கள்.