இசை கச்சேரி, இசை கலைஞர்கள், மார்கழி கச்சேரி, மார்கழி சங்கீத சீசன்

சென்னையில் திருவையாறு தொடக்கம் – பிரத்யேக படங்கள்

மார்கழி சீசனில் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி வரும் புதன்கிழமை முதல் தொடங்க இருக்கிறது. இதன் தொடக்கவிழா கோலாகலமாக இன்று தொடங்கியது. நிகழ்ச்சியில் பிரபல இசைப் பாடகர்கள் கலந்துகொண்டனர்.

இசை கலைஞர்கள், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல்

உலக வெப்பமயமாதலை தடுப்பதற்காக ஒரு இசை ஆல்பம்!

 ஹோம் ரெகார்ட்ஸ்  நிறுவனம் சார்பாக வயலின் இசைக் கலைஞர்கள் கணேஷ் – குமரேஷ் இருவரும் இணைந்து “சீசன்” என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். பருவ  காலங்களை நாம் ஆறு வகையாகப் பிரித்திருக்கிறோம். ஆனால் உலகம் வெப்பமாகிக் கொண்டிருப்பதால் அந்தந்த காலங்களில் நிகழ வேண்டியவை தள்ளிப் போய் விடுகிறது.இதற்கு மனிதனின் செயல்கள்தான் காரணம். இதுநாள்வரை அழித்தது போதும் இனி உலகத்தை காக்க நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்கிற உரிய கருத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த இசை ஆல்பம். கணேஷ்,  குமரேஷ், … Continue reading உலக வெப்பமயமாதலை தடுப்பதற்காக ஒரு இசை ஆல்பம்!

இசை கச்சேரி, இசை கலைஞர்கள், இசையமைப்பாளர், சினிமா, சினிமா இசை

1050 படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ்!

இசையமைப்பாளர் சங்கர் கணேஷின்  50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டும் விழா சென்னையில் நடந்தது. அவரை கௌரவிக்கும் வகையி 48 மணி நேர உலக சாதனை இசை நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணாவின் ஸரிகமபதநி இசை குழுவினர் நடத்தினர். சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்த பாடல்களை பாடி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மெய்மறக்க செய்தனர். விழாவில் பேசிய  சங்கர் கணேஷ்,‘‘மகராசி என்ற திரைப்படத்தில்  கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் 1963 ல் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அதை தொடர்ந்து… Continue reading 1050 படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ்!

இசை கலைஞர்கள், சினிமா, சினிமா இசை

500 பாடகர்கள் பாடிய திருக்குறள் : பரத்வாஜின் புதிய முயற்சி

நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் பரத்வாஜை “அதிதி ” படத்தின் பாடல் கம்போசிங்கில் சந்திக்க நேர்ந்தது. என்ன இவ்வளவு இடைவெளி? என்று கேட்டோம். ’’நான்கு வருடங்கள் ஒரு பெரிய இடைவேளியாகி விட்டது இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளையும் பாடலாக்கி விட்டேன். அறத்துப்பால் - பொருட்பால் - காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளை மூன்று விதமான விதங்களில் இசையமைத்து இருக்கிறேன். இதற்காக உலகம் முழுக்க உள்ள எல்லா நாட்டு தமிழ் பாடகர்களையும் பாட வைத்திருக்கிறேன்.… Continue reading 500 பாடகர்கள் பாடிய திருக்குறள் : பரத்வாஜின் புதிய முயற்சி

இசை கச்சேரி, இசை கலைஞர்கள், சைந்தவி திருமணம்!, தொலைக்காட்சி நிகழ்வுகள், மார்கழி சங்கீத சீசன்

மார்கழி சங்கீத சீசன் தொடங்கியாச்சு!

ஜீ தமிழ் வழங்கும் மார்கழி ராகம் நிகழ்ச்சி சென்னை, தி.நகரில் உள்ள நாரத கான சபாவில் இன்று காலை 10 மணி முதல் நடக்கவிருக்கிறது. இன்று தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் (15,16,17 நவம்பர் 2013) நடக்கவிருக்கும் கச்சேரிகளில் எஸ். சவுமியா, சைந்தவி, ஓ. எஸ். அருண் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அனுமதி இலவசம். இலவச டிக்கெட்டுகள் ஜீ தமிழ் அலுவயகத்திலும் கிரி டிரேடிங் ஏஜென்ஸியிலும் கிடைக்கும்.