இசை கலைஞர்கள், கர்நாடக சங்கீதம், கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா, தமிழ்நாடு

இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!

தமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொன்மைச் சிறப்புமிக்க தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் இசைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், பதிவு செய்யப்பட்ட கலைக் குழுவுக்கு… Continue reading இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!

Advertisements
இசை கலைஞர்கள், சினிமா

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் 45 வயதில் மரணம்!

குழந்தை மேதையாக கொண்டாடப்பட்ட மாண்டலின் ஸ்ரீனிவாசன் தன்னுடைய 45 வயதில் காலமானார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  கல்லீரல் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 45. ஸ்ரீனிவாசன் 1994-ம் மே 27-ல் ஆந்திராவைச் சேர்ந்த யுவஸ்ரீயை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது… Continue reading பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் 45 வயதில் மரணம்!

இசை கலைஞர்கள், இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை

தன்னுடைய ரசிகர் மன்றங்களை இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பின் மூலம் இணைத்திருக்கிறார் திரை இசையமைப்பாளர் இளையராஜா. இந்த கிளப்பின் முதல் நிகழ்ச்சி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இளையராஜா, ‘ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன. ஆண்டுதோறும் எனது தாயார் இறந்த நாளில் மட்டும் இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன். இங்கு… Continue reading காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை

இசை கலைஞர்கள், உலகம், சினிமா

100 மில்லியன் ஃபேஸ்புக் லைக் பெற்று ஷகிரா சாதனை!

சர்வதேச அளவில் எந்த பிரபலமும் பெறாத சாதனையை பெற்றிருக்கிறார் பாப் பாடகர் ஷகிரா. ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ஷகிராவின் பக்கத்துக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் 57 % பேர் பெண்கள். சமீபத்தில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டிகளில் நல்லெண்ண தூதராக ஷகிரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை கலைஞர்கள், இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

சிம்பு பாடிய புத்தாண்டு பாடல்!

மகாபலிபுரம் படத்துக்காக சிம்பு புத்தாண்டு பாடலைப் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் கே (முகமூடி, யுத்தம் செய்) இசையில் சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் புத்தாண்டு அன்று வெளியாகவிருக்கிறது.