ஃபேஷன் டிரெண்ட், அனுபவம், அலுவலக பெண்களின் பிரச்னைகள், அலுவலகம் செல்லும் பெண்கள்

வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படிப்பட்ட உடைகள் அணிய வேண்டும்?

வேலைக்கு செல்பவர்கள் கொஞ்சம் பளிச் நிற ஆடைகளை அணியலாம். இந்த நிறங்கள் ஒருவரை எல்லோரிடமும் பேதமின்றி பழகுகிறவராக அடையாளம் காட்டும். நட்பு பாராட்ட வேண்டிய அலுவலகச் சூழலில் அப்படிப்பட்ட நிறங்களைத் தேர்ந்தெடுப்பதே சரி . டல்லான நிறங்கள் ஒருவரை மூடி டைப்பாக காட்டும். பேஸ்டல் கலர்கள் சாஃப்ட் கேரக்டராக காட்டும். நாம் அணிந்திருக்கும் ஆடைகள் மூலமாகவே நமது தன்னம்பிக்கையை புலப்படுத்த முடியும். பிங்க், லைட் பச்சை, லைட் ப்ளூ இப்படி போன்ற கண்களை உறுத்தாத மென்மையான நிறங்களில்… Continue reading வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படிப்பட்ட உடைகள் அணிய வேண்டும்?

அலுவலக பெண்களின் பிரச்னைகள், இந்திய அம்மாக்கள், குடும்பம், செல்வ களஞ்சியமே, ரஞ்சனி நாராயணன்

இந்திய அம்மாக்களுக்கு ஏன் இவ்வளவு மனஅழுத்தம்?

செல்வ களஞ்சியமே- 18 எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தவர் திரு சேதன் பகத். ‘நண்பன்’ படத்தின் அசல் கதையான ‘3 idiots’ கதையின் ஆசிரியர். இவரது கதைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லோராலும் பாராட்டப்படுபவை. இந்திய பெண்மணிகளைப் பற்றி இவர் சொல்வதைக் கேளுங்கள்: ‘உலகிலேயே – நான் ஒருதலையாகப் பேசுகிறேன் என்று வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் – மிகவும் அழகியர்கள் என்றால் நம் இந்தியப் பெண்கள் தான்! தாயாக, சகோதரியாக, மகளாக, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பெண்ணாக, மனைவியாக,… Continue reading இந்திய அம்மாக்களுக்கு ஏன் இவ்வளவு மனஅழுத்தம்?

அலுவலக பெண்களின் பிரச்னைகள், அலுவலகம் செல்லும் பெண்கள், குடும்பம், குழந்தை பராமரிப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தை பராமரிப்புக்காக வேலையை விடத்தான் வேண்டுமா?

செல்வ களஞ்சியமே – 17 ‘அடுத்த வாரம் குழந்தைகளுக்காக வேலையை விட்ட அம்மாக்கள்’ என்று முடித்திருந்ததைப் படித்துவிட்டு ஒரு வாசகி ‘வேலையை விடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே!’ என்று கருத்துரை இட்டிருந்தார். நிறையப் பெண்கள் இவரைப்போலத்தான் நினைக்கிறார்கள். வேலையையாவது, நானாவது விடுவதாவது, நெவர்! ‘குழந்தையை அம்மா பார்த்துக் கொள்வாள். அம்மாவுக்கு உதவியாக – குழந்தையை தூக்கிக் கொள்ள, வேடிக்கை காட்ட, விளையாட ஒரு சின்னப் பெண் – மற்ற வீட்டு வேலைகளுக்கு ஒரு ஆள். காலையில்… Continue reading குழந்தை பராமரிப்புக்காக வேலையை விடத்தான் வேண்டுமா?

அலுவலக பெண்களின் பிரச்னைகள், அலுவலகம் செல்லும் பெண்கள், இந்திய அம்மாக்கள், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, சூப்பர் அம்மா, செல்வ களஞ்சியமே, பெண் தொழில் முனைவு, ரஞ்சனி நாராயணன், வீட்டிலிருந்தே உங்கள் அலுவலக வேலையை செய்ய முடியுமா, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

நீங்களும் ஆகலாம் சூப்பர் அம்மா!

செல்வ களஞ்சியமே – 16  இந்த வாரம் நாம் சில சூப்பர் அம்மாக்களைப் பார்க்கலாம். முதலில் டாக்டர் சுபா. இரண்டு வருடங்களுக்கு முன் தான் இவர் எனக்கு அறிமுகம் ஆனார். தோல் சிகிச்சை நிபுணர். முதல் தடவை போய்விட்டு வந்தபின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இவரைப் பார்க்கவில்லை. பிறகு ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டபோது சாயங்காலம் வாருங்கள் என்றார். ‘இப்போது காலை வேளைகளில் வருவதில்லையா?’ என்று கேட்டதற்கு, ‘குழந்தை பிறந்திருக்கிறது. மாலை வேளைகளில் கணவர் (அவரும் ஒரு… Continue reading நீங்களும் ஆகலாம் சூப்பர் அம்மா!

அலுவலக பெண்களின் பிரச்னைகள், அலுவலகம் செல்லும் பெண்கள், இந்திய அம்மாக்கள், குடும்பம், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, பெண்கள் பத்திரிகை, முதல் குழந்தை, ரஞ்சனி நாராயணன், வீட்டிலிருந்தே உங்கள் அலுவலக வேலையை செய்ய முடியுமா

குழந்தை வளர்க்கும் பொறுப்பு ஆண்களுக்கும்தான்!

செல்வ களஞ்சியமே - 15 இரண்டாவது முறையாக செல்வ களஞ்சியமே பகுதி  வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது. ஆரம்பித்த புதிதில் பெண்கள் மட்டுமே பின்னூட்டம் கொடுத்து வந்தார்கள். ஆண்கள் பலர் படித்து வந்தாலும் (பெண்கள் பத்திரிகைகளை ஆண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை!) இப்போது தான் பின்னூட்டம் போட ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுவும் இந்தத் தொடரின் வெற்றிக்கு ஒரு அளவுகோல் என்று சொல்லலாம். குழந்தை வளர்ப்பு என்பது ஆண் பெண் இருவரின் பொறுப்பு என்பதை இந்தக் கால ஆண்கள்… Continue reading குழந்தை வளர்க்கும் பொறுப்பு ஆண்களுக்கும்தான்!