அறிவியல்

நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள்!

அறிவியல் பேராசிரியர் கே. ராஜு நிலநடுக்கம் என்றாலே நமக்குக் குலை நடுங்குகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் நாம் பெரிய பூகம்பங்களைச் சந்தித்ததில்லை. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பமே நமக்கு கிலியைத் தர போதுமானதாக இருந்தது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்பையும் பொருளிழப்பையும் பெருமளவுக்குக் குறைக்க முடியும் என்பது இன்று பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் அளவு அறிவியல் எப்போது முன்னேறப்போகிறது என்று நமக்கு ஆதங்கம் இருக்கலாம். ஆனால் நிலநடுக்கத்தைத் தடுப்பது… Continue reading நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள்!

Advertisements
அறிவியல், அறிவியல் எழுத்து, இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் இடையே அன்பை வளர்க்கும் குரோமோசோம்!

செல்வ களஞ்சியமே - 86 ரஞ்சனி நாராயணன் தாத்தா பாட்டி இருவருள் பாட்டி சுலபமாக பேரன் பேத்திகளுடன் ஒன்றிவிடுவாள். ஏற்கனவே அம்மா பாத்திரம் செய்தவளாயிற்றே. இந்த உறவு வெறும் பாசத்தினாலோ அன்பினாலோ மட்டும் வருவதில்லை என்கிறது ஒரு ஆராய்ச்சி. பாட்டியைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா என்று வியப்பாக இருக்கிறதா? ஆமாம். பாட்டிக்களுக்கும் பேரன் பேத்திகளுக்கும் மரபணு ரீதியாக மிகுந்த தொடர்பு இருப்பதாக சொல்லுகிறது இந்த ஆராய்ச்சி. எல்லா வீடுகளிலும் பாட்டிகள் புதிய தாய்மார்களுக்கு இளம் குழந்தைகளை வளர்க்க… Continue reading பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் இடையே அன்பை வளர்க்கும் குரோமோசோம்!

அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம், தமிழ்நாடு

நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், நி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்… Continue reading நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம்

இயற்பியலுக்கான நோபல் அறிவிப்பு: மூன்று ஜப்பானியர் பகிர்கின்றனர்

நோபல் விருது 2014 உலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா ஆகிய ஆய்வாளர்கள் இந்தப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்தது. பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்கள் அவர்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.… Continue reading இயற்பியலுக்கான நோபல் அறிவிப்பு: மூன்று ஜப்பானியர் பகிர்கின்றனர்

அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம், உலகம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூவர் பகிர்ந்துகொள்கின்றனர்!

நோபல் பரிசு 2014 இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு, பிரிட்டிஷ் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீஃப், நார்வேயைச் சேர்ந்த தம்பதி எட்வர்ட் மோஸர், மே-பிரிட் மோஸர் ஆகிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோபல் பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்களில் (சுமார் ரூ.6.7 கோடி) ஒரு பாதி ஜான் ஓ கீஃபுக்கும், மற்றொரு பாதி மோஸர் தம்பதிக்கும் பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பிடத்தை அறிந்துகொண்டு, செல்ல வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும் குளோபல் பொஸிஷனிங்… Continue reading மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூவர் பகிர்ந்துகொள்கின்றனர்!