அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள்

ஜெயகாந்தன் மறைந்தார்!

ஞா.கலையரசி   தமிழ் இலக்கிய உலகில் ஜே.கே என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் (1934 – 2015) 08/04/2015 அன்று சென்னையில் காலமானார். இவர் மறைவுக்குத் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும், ‘எழுத்துலகச் சிற்பி,’ ‘சிறுகதை இலக்கியத்தின் முடிசூடா மன்னன்,’ ‘தமிழ் இலக்கிய ஒளிச்சுடர்,’ ‘படிக்காத மேதை,’ ‘முற்போக்குச் சிந்தனைவாதி,’ ‘தமிழ் இலக்கிய பிதாமகன்,’ என்றெல்லாம் புகழாரம் சூட்டிக் கண்ணீரஞ்சலி செலுத்தியுள்ளனர். கடலூரில் வேளாண்குடும்பத்தில் பிறந்து ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இலக்கியத்துக்கான மிக உயர்ந்த… Continue reading ஜெயகாந்தன் மறைந்தார்!

அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு, பெண் எழுத்தாளர், பெண்ணியம்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் காலமானார். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட்… Continue reading எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

அஞ்சலி, சினிமா

காந்தி படத்தின் இயக்குநர், நடிகர் ரிச்சர்ட் அட்டென்பரோ: அஞ்சலி

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட நடிகரும், 1982-ல் வெளியான 'காந்தி' திரைப்படத்தை இயக்கியவருமான ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று காலமானார். ரிச்சர்ட் அட்டென்பரோ, மகாத்மா காந்தியின் அகிம்சை வரலாற்றை சித்தரிக்கும் 'காந்தி' படத்தை இயக்கியதன் மூலம் இந்திய மக்களிடையே பிரபலம் பெற்றவர். இந்தப் படம் ஆஸ்கர் விருதுகளையும் கோல்டன் க்ளோப் விருதுகளையும் குவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய நடவடிக்கைகளுக்கு நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷன்', பிரிட்டனின் உயரிய 'லார்ட்'… Continue reading காந்தி படத்தின் இயக்குநர், நடிகர் ரிச்சர்ட் அட்டென்பரோ: அஞ்சலி

அஞ்சலி, சினிமா

நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி

பிரபல நாடக கலைஞரும் நடிகையுமான ஸோரா ஷெகல் நேற்று மாரடைப்பால் உயிர் நீத்தார். அவருக்கு வயது 100. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஸோரா, தன் இளம் வயதிலேயே பாரம்பரியமான  பழக்கவழக்கங்களிலிருந்து வேறுபட்டு தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர். பட்டப்படிப்பு படித்தார், இங்கிலாந்து சென்று நடனம் கற்று உலக நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தியாவுக்குத் திரும்பி புகழ்பெற்ற பிருத்வி தியேட்டர்ஸ் குழுவினருடன் பணியாற்றத் தொடங்கினார். தன்னைவிட 8 வயது இளையவரான அறிவியலாளர் காமேஸ்வர் ஷெகலை பலத்த… Continue reading நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி

அஞ்சலி, இந்த வார புத்தகங்கள், புத்தக அறிமுகம், புத்தகம்

புத்தக அறிமுகம்- தனிமையின் நூறாண்டுகள்

புத்தக அறிமுகம் இலத்தீன் அமெரிக்கா எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கோஸ் நேற்று முன் தினம் (17 ஏப்ரல் 2014) காலமானார்.  மார்ச் 6, 1927ல் கொலம்பியாவில் பிறந்தவர் மார்க்கோஸ் . பத்திரிகையாளராக தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய இவர், பின் முழுநேர எழுத்தாளராகி தன் படைப்புகளின் மூலம் உலக இலக்கிய வாசகர்களால் கொண்டாடப்படுகிறார். தன் இலக்கிய பங்களிப்புகளுக்காக நோபல் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவருடைய One Hundred Years of Solitude நாவலை சுகுமாரன்… Continue reading புத்தக அறிமுகம்- தனிமையின் நூறாண்டுகள்