இலக்கியம்


கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் அஞ்சலி

இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே. லட்சுமண் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. சிறுநீரக நோய்த்தொற்றால் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த 18-ம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற பெயருடைய ஆர்.கே. லட்சுமண், மைசூரில் பிறந்தவர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் இளைய சகோதரரான இவர் ஆரம்ப காலத்தில்,’தி இந்து’ நாளிதழில் வெளியான ஆர்.கே.நாராயண் சிறுகதைகளுக்கு ஓவியங்கள்… Read More ›

அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!

அழியும் வரலாறு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம்  கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு,  நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக… Read More ›

த மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

‘மாதொருபாகன்’ நாவல் விவகாரத்தில் அமைதிக் குழு கூட்டத்தின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்  தொடர்ந்த  வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது…. Read More ›

எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை

எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக்… Read More ›

’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்

இந்த மாத புத்தகமாக புகைப்படக் கலைஞரும் எழுத்தாளருமான  ராமலக்ஷ்மி எழுதிய இலைகள் பழுக்காத உலகம் கவிதைத் தொகுப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இணையத்தில் வலைத்தள பதிவராக நன்கு அறியப்பட்டவர் ராமலக்ஷ்மி. வீட்டுப் பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பெண்கள் ராமலக்ஷ்மியை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய இளவயது புகைப்பட ஆர்வத்தை அப்படியே புதைத்துக் கொள்ளாமல் தன்னுடைய மத்திம வயதில் கைகளில் கேமராவுடன் களமிறங்கிய பெண்..! இன்று அறியப்பட்ட பெண் புகைப்படக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். அதுபோலவே இவருடைய எழுத்துப் பயணமும் குறிப்பிடத் தகுந்தது. எழுத்தாளர்… Read More ›

எழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது!

தமிழின் முக்கியமான எழுத்தாளரான கோணங்கிக்கு 2013-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், எம்.ஏ.நுஃமான், பெருமாள் முருகன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. விளக்கு விருது ரூ.50,000… Read More ›

நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்

நூல் அறிமுகம் சித்திரம் பேசேல் ஆசிரியர்: மீனா எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com தமிழிலக்கியம் பயின்றவரான மீனா, தமிழ் இலக்கிய வெளியில் நம்பிக்கைக்குரிய வரவு. தமிழ் இலக்கியத்தில் இயங்கும் பெண்கள், கவிதையைத் தாண்டி எழுதுவதில்லை என்ற தட்டையான விமர்சனத்தை எதிர்கொள்ள மீனாவின் கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை பரிந்துரைக்கலாம். 2009ல் தீராநதியில் இவர் எழுதிய பாலியல் கலகம்… Read More ›

எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர். அபிலாஷ், ஆங்கில இலக்கியம் படித்தவர். நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணைப் பற்றிய இவருடைய நாவலான ‘கால்கள்’ (உயிர்மை பதிப்பக வெளியீடு 2012) யுவபுரஸ்கார் விருதை இவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்றிரவு நிலவின் கீழ் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமான ஆர். அபிலாஷ்,  கட்டுரை, நாவல் என தன்னுடைய படைப்பு தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். குறிப்பாக பல்வேறு இதழ்களில் விளையாட்டுத் துறை தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ’புரூஸ்லி… Read More ›

திருவண்ணாமலையில் பிரபல எழுத்தாளர்கள் நடத்தும் சிறுகதை பயிற்சி பட்டறை

தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்துகிறது. இந்த பயிற்சி பட்டறை குறித்து தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்: எழுத்தாளர் பிரபஞ்சன் எழுத்தாளர் அழகியபெரியவன் எழுத்தாளர் போப்… Read More ›

கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்

தரிசனம் கௌதம சித்தார்த்தன் அவன் எனது பிஷப்பை வெட்டி ராஜாவுக்கு செக் வைத்தபோது கதவு தட்டப்பட்டது. எனது கணவராகத்தானிருக்கும். ஆட்டத்தின் சுவாரஸ்யம் சடுதியில் கலைய, நான் அவனைப் பார்த்தேன். அவன் சட்டென எழுந்துபோய் மறைந்து கொண்டான். சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தேன். அவர் பதற்றத்துடன் உள்ளே நுழைந்து நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டார். சமீப காலமாக என் கணவருடைய கண்களின் இடுக்கில் குரூரம் மின்ன ஆரம்பித்திருக்கிறது. நெற்றிச் சுருக்கங்களிலும், முகத்திலும் சந்தேக… Read More ›

பெண் எழுத்தாளர்களுக்கும் சல்மாவிற்கும் என்ன சம்பந்தம்? மனுஷ்யபுத்திரன் கேட்கிறார்

பெண் எழுத்தாளர்கள் பற்றிய சர்ச்சையில் சல்மாவிற்கு என்ன தொடர்பு என்று கேட்டு புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் உயிர்மை இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன்… Read More ›

முஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்

2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமுஎகச கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன…Read More ›

எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கனடாவிலிருந்து இயங்கும் தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற அமைப்பு வருடந்தோறும் சிறந்த தமிழ் இலக்கிய பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது….Read More ›

அம்பையால் மட்டுமே இது முடியும்!

அம்பையை பற்றி சிலாகிக்கும் தருணங்களில் எல்லாம் அவரின் “காட்டில் ஒரு… Read More ›

பாரதிதாசனின் 125வது பிறந்த நாள் விழாவில் கவிதையாற்ற விருப்பமா?

புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 1,250 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் எதிர்வரும் ஏப்ரல் 29-ம் தேதி 2015 ல் நடைபெறவுள்ளது.Read More ›

சிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு!

சிறுகதை மொழி பெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சமூக சேவை, கவிதை, சிறந்த பத்திரிகையாளர் ஆகிய பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும்… Read More ›

இலக்கிய பரப்பில் சுதந்திரமாக இயங்க முடிவதில்லை: ஜெயந்தி சங்கர் நேர்காணல்

இலக்கியம் சிறப்பு நேர்காணல்-எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூரில் வசித்துவரும் ஜெயந்தி சங்கர் தமிழ் இலக்கிய பரப்பில் அவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களைல் இயங்கிவருபவர். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் Read More ›

விக்ரமாதித்யன் எண்பதுகளின் கலகலக்காரர்!

விழாவில் பேசிய ஞானக்கூத்தன், ”கவிஞர் விக்ரமாதித்யன் எண்பதுகளில் கலகக்காரராக… Read More ›

பெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்களா?

தமிழின் முதன்மையான இலக்கிய வாசகர் திகசி மறைவு!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று… Read More ›

‘இன்றைய பெண் எழுத்துக்கள் சக மனுஷியாய் எளிய அன்பையே கோருகின்றன’ கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

சர்ச்சையை வேறு திசையில் மாற்றிய அம்பையின் கட்டுரை!

‘‘ஏழைகளைப் பற்றி எழுதுவதால் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா?’’ கேட்கிறார் ஜோ டி குரூஸ்

”ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிப்பவர்கள் பெண்களே!”

முதல் பெண் பட்டதாரியின் கதையை எழுதுங்கள்!

பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!

தடை செய்யப்பட்ட புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

அதிக வாசகர்களை ஈர்த்துக்கொண்ட குங்குமம் – எப்படி சாத்தியமானது?

புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்!

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s