தேவையான பொருட்கள்:
திக்கான சார்ட் பேப்பர்
மார்க்கர் பென்
கத்தரிக்கோல்
திக்கான நூல் (அ) சணல் கயிறு
ஸ்கேல்
ஸ்டேப்ளர்
பென்சில்
எப்படி செய்வது?
சதுரமாக இருக்கும் ஒரு பெரிய சார்ட் பேப்பரை இரண்டாக மடித்து(செவ்வகமாக வரும்) வெட்டிக்கொள்ளுங்கள். இரண்டாக வெட்டியதில் ஒரு பக்கத்தை எடுத்து, மடித்து மீண்டும் இரண்டாக வெட்டுங்கள். மீண்டும் அவற்றை தனித்தனியாக இரண்டாக வெட்டுங்கள். பேனர் சற்று பெரிதாக இருந்தால்தான் சுவரில் ஒட்டும்போது தூரத்திலிருந்து பார்க்க நன்றாகத் தெரியும். உங்களுக்கு பிடித்த சைசில், எழுத்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி செவ்வக துண்டுகளை வெட்டிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு சார்ட் துண்டிலும் கீழ்ப் பகுதியில் ஸ்கேலை வைத்து இப்படி முக்கோணம் வரைந்து அதை வெட்டி எடுத்து விடுங்கள்.
இப்படி வெட்டிய துண்டை பின்பக்கமாக மடித்துக்கொள்ளுங்கள். மடித்தபிறகு அங்கே ஸ்டேப்ளர் செய்யுங்கள்.
இப்படி தயாரித்து வைத்த ஒவ்வொரு அட்டையிலும் முதலில் பென்சிலால் எழுத்துக்க்களை பெரிதாக எழுதி, பிறகு மார்க்கர் பென்னால் எழுதுங்கள்.
மடித்து ஸ்டேப்ளர் செய்திருக்கும் இடத்தின் வழியாக நூலை நுழைத்து ஒவ்வொரு அட்டையையும் வரிசையாக கோர்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டு பக்கமும் சுவற்றில் மாட்டும் அளவுக்கு நூலை விடுங்கள். கோர்த்ததை எடுத்து பாருங்கள்…இதோ நீங்களே தயாரித்த பர்த்டே பேனர்!