தேவையானவை:
குரோஷா நூல்
குரோஷா ஊசி
கத்தரிக்கோல்
சணல் கயிறு
ஃபேப்ரிக் க்ளூ
எப்படி பின்னுவது?
மிகவும் எளிதான குரோஷா பின்னல் மூலம், அழகான கோஸ்டர்களை உருவாக்கலாம்.
சணல் கயிற்றை எடுத்து முடிச்சு போடுவதுபோல், சிறிய வளையம் செய்து, அதை ஃபேப்ரிக் க்ளூவால் (சணல் கயிறு முடிச்சு பெரிதாக தெரியும் என்பதலால்) ஒட்டிங்க்கொள்ளுங்கள். ஃபேப்ரிக் க்ளூ ஒட்டுவதற்கு அரை மணிநேரமாவது ஆகும். அதன் பின் பின்னல் போட ஆரம்பிக்கலாம்.
குரோஷா ஊசியையும் நூலையும் தயாராக வைத்துக்கொண்டு, சணல் கயிற்றில் ஒட்டி வைத்திருக்கும் வளையத்தின் தொடக்கத்தில் ஒரு சிங்கிள் பின்னலைப் போடுங்கள். சணல் வளையத்தை சுற்றியும் தொடர்ந்து இப்படி சிங்கிள் பின்னலைப் போட்டுக்கொண்டே வரவேண்டும்.
முதல் வட்டம் முடிந்ததும், அடுத்த வட்டத்துக்கு சணல் கயிறை சேர்த்து வைத்து, பின்னல் போடவேண்டும். முதல் வட்டத்தில் போட்டு முடித்த பின்னலின் மேல்பக்கத்தில் நுழைத்து சணல் கயிறை சேர்த்து சிங்கிள் பின்னலை போடுங்கள்.
அடுத்து, முதல் வட்டத்தை சேர்க்காமல் சணல் கயிறை மட்டும் சேர்த்து ஒரு சிங்கிள் பின்னல் போடுங்கள். இப்படி முதல் வட்டத்தில் ஒன்று சணல் கயிறில் ஒன்றுமாக பின்னிக்கொண்டே வாருங்கள். வட்டத்தை பெரிதாக இப்படி பின்னல்களை அதிகப்படுத்துகிறோம். இப்படியே அடுத்தடுத்து வட்டத்தை பெரிதாக்கி பின்னிக்கொண்டே செல்லலாம்.
கோஸ்டர் அளவு வந்தவுடன் முதலில் சணல் கயிறை வெட்டிவிட்டு, ஒரு பின்னல் போட்டு இறுதியாக நூலை வெட்டி முடிச்சு போடுங்கள்.
நூலால் மட்டும் பின்னிய கோஸ்டர், மெல்லியதாக இருக்கும். சணல் கயிறு வைத்து பின்னியிருப்பதால் அதிக சூட்டை தாங்கும் இந்த கோஸ்டர். பார்க்கவும் அழகாக இருக்கும்!