தேவையானவை:
உல்லன் நூல் – வெவ்வேறு நிறங்களில் தலா ஒரு கட்டு
குரோஷா ஊசி – 1
பெரிய பட்டன் – 1
கத்தரிக்கோல்
செய்வது எப்படி?
அடர் நிற உல்லன் நூல், வெளிர் நிற உல்லன் நூல் இரண்டை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். கிரானி ஸ்கொயர் எப்படி போடுவது என்று பார்த்தோம். அதே முறையில் ஸ்மார்ட் போன் அளவுக்கு ஏற்றபடி கிரானி ஸ்கொயரை போடுங்கள். கிரானி ஸ்கொயர் செய்முறை மீண்டும் உங்களுக்காக…
முதலில் ஆறு சங்கிலி பின்னல்களைப் போடுங்கள். ஆறாவது சங்கிலியை முதல் சங்கிலியில் நுழைத்து ஒரு வட்டமாக்குங்கள். இந்த வட்டத்திலிருந்து வெளியே வந்த சங்கிலியில் மூன்று சங்கிலிகளைப் போடுங்கள். இதை வட்டத்தினுள் நுழைத்து டபுள் பின்னலை போடுங்கள். இதிலிருந்து இன்னொரு டபுள் பின்னலை வட்டத்தினுள் நுழைத்து போடுங்கள். இப்போது சங்கில் பின்னல் வட்டத்தில் மூன்று டபுள் பின்னல் போட்டிருப்போம். இறுதியாக போட்ட பின்னலிலிருந்து இரண்டு சங்கிலி பின்னல்களைப் போடுங்கள். அடுத்து மூன்று டபுள் பின்னல்களைப் போட வேண்டும். மேலும் இரண்டு சங்கிலி பின்னல்கள் மூன்று டபுள் பின்னல்கள் என மொத்தம் நான்கு முனைகளை போட வேண்டும். இப்போது முதல் சதுரம் கிடைத்திருக்கும்.
அடுத்த சதுரத்தை ஆரம்பிக்கும்போது முடித்த இடத்திலிருந்து மூன்று சங்கிலிகளைப்போட்டு மூன்று டபுள் பின்னலுக்கு அடுத்துள்ள இடைவெளியில் நுழைத்து மூன்று டபுள் பின்னல்களைப் போடுங்கள். அடுத்து இரண்டு சங்கிலி பின்னல்கள் போட்டு முடித்ததும் அதே இடைவெளியில் மேலும் மூன்று பின்னல்களைப் போடுங்கள். இப்போது ஒரு சங்கிலி பின்னல் போட்டு அடுத்த இடைவெளியில் மூன்று டபுள் பின்னல்களைப் போடுங்கள். அடுத்து இரண்டு சங்கிலிகள் மூன்று டபுள் பின்னல்களைப் போடுங்கள். மீண்டும் ஒரு சங்கிலி, அடுத்த இடைவெளியில் மூன்று டபுள், இரண்டு சங்கிலி என வட்டத்தை முழுமையாக்குங்கள்.
ஒவ்வொரு சதுரத்திலும் நான்கு முனைகளில் மட்டும் மூன்று டபுள் இரண்டு சங்கில் மூன்று டபுள் பின்னல்கள் போட வேண்டும். மற்ற இடங்களில் ஒரு சங்கிலி மூன்று டபுள் பின்னல் என போட வேண்டும். கிரானி ஸ்கொயரை போட்ட வரை இரண்டாக மடியுங்கள், செல்போன் உயரம் வந்துவிட்டால் நிறுத்திவிடுங்கள்.
முடித்து வைத்த கிரானி ஸ்கொயரை இரண்டாக மடித்துக்கொள்ளுங்கள். அதன் அகலமான பக்கத்தை திறந்த மூடும் வகையில் பயன்படுத்தப்போகிறோம். நீளமான இரண்டு முனைகளையும் இணைக்கப் போகிறோம். அகலமான பக்கத்தின் ஒரு புறம் வெளிர் நிற நூலைகொண்டு சிங்கிள் பின்னலை போடுங்கள். பின்னல் முடியும்போது நீளவாக்கில் இரண்டு முனைகளை சேர்த்து சிங்கிள் பின்னல் போட வேண்டும். இப்போது ஒரு பக்கம் பின்னலால் இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல் மற்ற பக்கத்திலும் அகலவாக்கில் திறந்த முடியும் நீளமான பக்கத்தில் இணைத்து சிங்கிள் பின்னலை போடுங்கள்.
செல்போன் பவுச்சிலிருந்து விழாமல் இருக்க, முன்பக்கம் ஒரு பெரிய பட்டனை இணைக்க வேண்டும். இரண்டு நிறங்களில் துண்டு நூல்களை வெட்டி, பட்டனில் நுழைத்து கட்டிக்கொள்ளுங்கள். ஊசி நூல் கோர்த்து தையல் போடவேண்டிய அவசியம் இல்லை.
பவுச்சின் பின்பக்கத்தின் நடுப்பகுதி முனையிலிருந்து சங்கிலி பின்னல் போட்டு, முன்பகுதியில் இருக்கும் பட்டனை சுற்றி, முடிச்சு போல பின்னல் போடுங்கள்.
இதோ தயாராகிவிட்டது ஸ்மார்ட் போன் பவுச்!
very good