கேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி உலக பிரபலமானது. இந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள தரப்படும் இட்லி பொடி பிரத்யேக சுவையுடையது. அதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
கல் உப்பு, எண்ணெய் – தேவையானவை
செய்முறை:
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சரிசியை சிம்மில் வைத்து கவனமாக சிவக்க வறுக்கவும். அதை ஒரு தட்டில் கொட்டி, ஆறவைக்கவும். அரிசி வறுத்த அதே கடாயில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். இதையும் ஆறவைக்கவும்.
கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், போட்டு வறுக்கவும். அதில் பெருங்காயத்தைப் போட்டு சில நொடிகள் வறுத்தெடுக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற விட்டு, கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். இட்லி அல்லது தோசையுடன் பொடியை பரிமாறும்போது தேங்காய் எண்ணெய் கலந்து உண்ணவும்!
வீடியோவில் முழு செய்முறையையும் காணலாம்.