ஜவ்வரிசி வடை
தேவையானவை:
ஜவ்வரிசி – அரை ஆழாக்கு
அரிசி மாவு – அரை ஆழாக்கு
தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
புளித்த தயிர் – 2 கரண்டி
செய்முறை:
தேவையான அனைத்து பொருட்களையும் புளித்த தயிரில் போட்டு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின், கலவை கெட்டியாகிவிட்டால், சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
பின்குறிப்பு: ஜவ்வரிசிக்குப் பதிலாக ரவை சேர்த்தும் வடை செய்யலாம். அதில் ரவை முக்கால் ஆழாக்கும், அரிசி மாவு கால் ஆழாக்கும் சேர்த்து செய்ய வேண்டும்.
கடலை மாவு சட்னி
தேவையானவை:
கடலை மாவு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (அளவில் சிறியதாக)
பச்சை மிளகாய் – 2
கடுகு , உளுத்தம் பருப்பு – தாளிக்க
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவை அரை ஆழாக்கு தண்ணீரில் நன்கு கரைத்து வைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை கொட்டி கிளறவும். பிறகு, உப்பு சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் கிளறி இறக்கவும்.
Searches related to javvarisi vadai