வனிதா பிரபு
தேவையான பொருட்கள்:
பிளாஸ்டிக் வளையல் – 6
சில்க் த்ரெட் – மூன்று நிறங்கள்
ஃபேப்ரிக் க்ளூ
ஸ்டோன் செயின் – தேவையான அளவு
குந்தன் கற்கள் – தேவையான அளவு
கத்தரிகோல்
எப்படி செய்வது?
சில்க் த்ரெட்டை ஒரு அட்டையில் சுற்றி நூல் பிரிந்துவிடாத படி ஒரு முனையில் க்ளூ தடவிக் கொள்ளுங்கள். அந்த நூலைக்கொண்டு பிளாஸ்டிக் வளையத்தின் அடித்தளத்தில் க்ளூ தடவி நெருக்கமாக சுற்றுங்கள். ஒவ்வொரு நிறத்திலும் இரண்டு வளையல்களுக்கு இதுபோல நூல் சுற்றுங்கள்.
இரண்டு ஒரே நிற வளையல்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து க்ளு போட்டு ஒட்டிக்கொள்ளுங்கள். இதேபோல மற்ற இரண்டு நிறத்திலும் வளையல்களை சுற்றிக்கொள்ளுங்கள்.
சிவப்பு மற்றும் பச்சை நிற வளையலுக்கு நடுவே ஸ்டோன் செயினை க்ளு போட்டு ஒட்டுங்கள். வெளிர் நிற வளையலில் குந்தன் ஸ்டோன்களை ஒட்டி அழகுபடுத்துங்கள்.