லதா மணி ராஜ்குமார்
தேவையான பொருட்கள்:
டபுள் கிரேப் பேப்பர் – சிவப்பு, வெளிர் பச்சை , அடர் பச்சை நிறங்களில்
கத்திரிகோல்
32 கேஜ் கம்பி
கட்டிங் பிளேயர்
க்ரீன் டேப்
நூல்
பஞ்சு
பசை
எப்படி செய்வது?
டபுள் கிரேப் பேப்பர் என்பது இழுவை தன்மை உள்ள காகிதம். ஸ்டேஷனரி கடைகளில் இது கிடைக்கும்.
சிவப்பு நிற டபுள் கிரேப் பேப்பரை நீள வாக்கில், பூவின் இதழ் அளவிற்கு ஏற்ப வெட்டிக்கொள்ளுங்கள்.
நீள வாக்கில் வெட்டியதை சின்ன சின்ன சதுரங்களாக வெட்டுங்கள்.
வெட்டிய சதுடங்களில் பென்சிலால் இதழில் வடிவில் வரைந்து வெட்டுங்கள். ஒரு ரோஜாவை உருவாக்க 11 அல்லது 13 இதழ்கள் தேவை.
வெட்டிய இதழ் துண்டுகளை ரோஜா இதழ்போல வடிவம் தர, ரெண்டு விரலை வைத்து ‘கப்’ போல செய்துகொள்ளுங்கள்.
அடுத்து, இதழின் இருபுறமும் கம்பி வைத்து சுருட்டுங்கள்.
காம்பு செய்வதற்காக கம்பியை பிளேயரால் தேவையான நீளத்துக்கு வெட்டுங்கள். கம்பியை க்ரீன் டேப்பால் சுற்றுங்கள். நுனியை ஊக்கு போல வளைத்து சிறிதளவு பஞ்சை வையுங்கள்.
இதழுக்காக வெட்டிய ஒரு சதுரத்தை எடுத்து, காம்பில் பஞ்சு வைத்த இடத்தில் வைத்து பூவின் மொட்டு போல, நூலால் கட்டுங்கள்.
இந்த மொட்டை சுற்றி, ரோஜா இதழ் வடிவில் உருவாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு பேப்பர் இதழையும் அடிப்பக்கமாக வைத்து பூ கட்டுவதுபோல கட்டுங்கள்.
அடுத்து, பூவின் அடியில் இருக்கும் பச்சை நிற பகுதிக்கு, வெளிர் பச்சை கிரேப் பேப்பரை ‘ஜிக் ஜாக்’ போல வெட்டி கட்டி முடித்த ரோஜாவைச் சுற்றிலும் பசை கொண்டு ஒட்டுங்கள்.
அடர் பச்சை நிற பேப்பரால் இலைகளை செய்து, க்ரீன் டேப்பால் காம்புடன் இணையுங்கள்.
அழகான பேப்பர் ரோஜா தயார்!