வனிதா பிரபு
தேவையான பொருட்கள்:
ஆண்டிக் ஃபினிஷ் தோடுகள் – 2
ரவுண்ட் பிளாஸ்டிக் ஜிமிக்கி அடித்தளம் – 2
சில்க் த்ரெட் – மூன்று நிறங்களில்
ஃபேப்ரிக் க்ளூ – 1
கோல்டு கம்பி – தேவையான அளவு
ஹெட் பின் – 1
கோல்டன் பீட் – 2
பீட் கேப் – தேவையான அளவு
ஸ்டோன் செயின் – தேவையான அளவு
பிளையர்
எப்படி செய்வது?
சில்க் த்ரெட்டை ஒரு அட்டையில் சுற்றி நூல் பிரிந்துவிடாத படி ஒரு முனையில் க்ளூ தடவிக் கொள்ளுங்கள். அந்த நூலைக்கொண்டு பிளாஸ்டிக் ஜிமிக்கி அடித்தளத்தில் க்ளூ தடவி நெருக்கமாக சுற்றுங்கள். மூன்று நிற நூலையும் சரியான இடைவெளியில் சுற்றி, பசை போட்டு ஒட்டி முடியுங்கள். பசையை உள்புறமாக பயன்படுத்துங்கள். மற்றொரு ஜிமிக்கியையும் இப்படியே தயாரிக்கவும்.
ஜிமிக்கி மேல் பீட் கேப்பை க்ளு கொண்டு ஒட்டுங்கள். ஹெட் பின்’னில் கோல்டன் பீட் சேர்த்து நூல் சுற்றிய ஜிமிக்கியை சேருங்கள். ஹெட் பின்’னின் முனையை, ஆண்டிக் ஃபினிஷ் தோட்டோடு சேர்த்து பிளையர் கொண்டு முறுக்கி விடுங்கள்.