தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பூத்துக் குலுங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த விருப்பத்தை நிறைவேற்ற இதோ சில வழிமுறைகள்…
* தொட்டியில் ரோஜா செடி வளர்க்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் இரண்டடி உயரமுள்ள தொட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதிகம் ஈரமிள்ளாத வளமான மண்ணைத் தொட்டியில் இட்டு, ரோஜா செடியை நடுங்கள்.
* பனிக்காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் கோடையில் தினமும் நீர் ஊற்றுங்கள்.
* ரோஜா செடி உள்ள தொட்டி உள்ள இடத்தில் குறைந்தது ஆறு மணி நேரம் நேரடி சூரிய ஒளி பட வேண்டும். அப்போதுதான் செடி ஆரோக்கியமாக வளரும்.
* மூன்று மாத இடைவெளியில் இயற்கை உரத்தை இடுங்கள். தொட்டியில் உள்ள செடியின் மேல்புறத்தில் கீறிவிட்டு உரத்தை போடுங்கள்.
* பனிக்காலம் முடிந்தவுடன் செடியை நறுக்கிவிடுங்கள். பூத்து முடித்த கிளைகளை கிடை மட்டமாக வெட்டுவிடுங்கள். ‘y’ ஷேப்பில் கிளைகளையும் வெட்டி விடுங்கள். துளிர்க்க வாய்ப்பில்லாத கிளைகளையும் வெட்டிவிடுங்கள்.