செய்து பாருங்கள்

நீங்களும் செய்யலாம் சாக்லேட் பொக்கே!

சாக்லேட் மேக்கிங் பலருக்கு இனிப்பான பார்ட் டைம் வேலையாக உள்ளது. சென்னையைச் சேர்ந்த வனிதா பிரவுக்கும் அப்படியே. எதேச்சையாக கற்றுக்கொள்ள ஆரம்பித்து, ஹாபியாக செய்யத் தொடங்கி, இன்று புரபஷனலாக சாக்லேட்டுகளை செய்து சூப்பர் மார்கெட், பேக்கரிகளுக்கு கொடுத்துவருகிறார். சாக்லேட் பொக்கேக்களை அதிகமாக செய்து தருவதாக சொல்கிறார் வனிதா. தன்னுடைய ஸ்பெஷலான கைத்திறனை நமக்காக இங்கே கற்றுத்தருகிறார்.

என்னென்ன தேவை?

கலர் பேப்பர் சுற்றிய சாக்லேட்டுகள் – 10
பலூன் குச்சிகள் – 10
கத்திரிகோல் – 1
செலபோன் டேப் – 1
கோல்டன் டிஸ்ஸு துணி – கால் மீட்டர்
ஃபெல்ட் பேப்பர் – 1 ஷீட்
செலபோன் பேப்பர் – 1
கலர் ஷீட் – 1
நூல் – 1
ஸ்டெப்ளர் – 1

பொக்கே எப்படி செய்வது?

தயார் செய்த சாக்லேட்டுகளை கலர் பேப்பர்களால் சுற்று வைத்துக்கொள்ளவும். கலர் ஷீட்டுகளை சின்ன சின்ன சதுரத் துண்டுகளாக வெட்டி வைக்கவும். கோல்டன் டிஷ்ஷு பேப்பரை இவற்றை விட ஒரு மடங்கு பெரிய சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

பலூன் குச்சி (பலூன் ஸ்டிக்) மேல் சாக்லேட்டை வைத்து செலபோன் டேப்பால் ஒட்டவும்.
அதன் மேல் வெட்டி வைத்த கலர் ஷீட்டை சுற்றி நூலால் பூ கட்டுவதைப் போல இறுக்கமாக கட்டவும். 10 குச்சிகளையும் இதுபோல் தயாரிக்கவும்.

அடுத்து, டிஷ்ஷு துணியை முக்கோணமாக மடித்து கலர் ஷீட் சுற்றிய சாக்லேட் குச்சிகளை சுற்றவும். இதையும் நூலால் பூ கட்டுவதைப் போல கட்டிக்கொள்ளவும். அனைத்து குச்சிகளையும் இதுபோல தயாரிக்கவும்.

டிஷ்ஷு பேப்பர் சுற்றிய சாக்லேட் குச்சிகளை பொக்கேவாக அடுக்கப் போகிறோம். நடுவே ஒரு குச்சியை வைத்து அதைச் சுற்றிலும் ஒவ்வொன்றாக குச்சிகளை அடுக்கிகொண்டே வரவேண்டும். ஒவ்வொன்றையும் இணைக்கும் போது செலபோன் டேப்பால் இருக்கமாக குச்சிகளை ஒட்டிக்கொள்ள வேண்டும்.

பொக்கே ரெடியானது அதை, ஃபெல்ட் பேப்பரால் சுற்ற வேண்டும். சதுரமாக வெட்டிய ஃபெல்ட் பேப்பரை முக்கோணமாக்கி பொக்கேவை சுற்றுங்கள். அவிழாமல் இருக்க ஃபெல்ட் பேப்பரில் ஆங்காங்கே ஸ்டெப்ளரால் பின் செய்யுங்கள்.

அதன் மேல் செலபோன் பேப்பரை சுற்றி பின் செய்யுங்கள். கீழே குச்சிகளை ஃபெல்ட் பேப்பரால் சுற்றி கவர் செய்யுங்கள். இறுதியாக ‘போ’ ஒன்றை வைத்தால் சாக்லேட் பொக்கே தயார்!

சாக்லேட் செய்வது எப்படி ?

மில்க் சாக்கோஸ், டார்க் சாக்கோஸ் என இரண்டு வகையான சாக்லேட் பேஸ் உள்ளது. இந்த இரண்டையும் சம அளவில் கலந்தால் இனிப்பான சாக்லேட்டுகள் கிடைக்கும். இந்த இரண்டு பார்களையும் சம அளவில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து (அடுப்பை சிம்மில் வைக்கவும்) சூடாக்கவும். அதன் மேல் சாக்லேட் வைத்துள்ள பாத்திரத்தை வைக்கவும். இதுதான் டபுள் பாயிலிங். சாக்லேட்டை இப்படித்தான் உருக்கி பயன்படுத்த வேண்டும். 5-10 நிமிடத்தில் சாக்லேட் உருகிவிடும். உருகிய சாக்லேட்டுகளை சாக்லேட் மோல்டில் ஊற்றி ப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சாக்லேட் தயார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.