எம்பிராய்டரிகளில் நவீன உடையலங்காரங்களில் பயன்படுத்த ஏற்றது ஃபிரென்ச் நாட்! இந்த எம்பிராய்டரி எப்படி போடுவது என்று பார்ப்போம்.
முதலில் உங்களுக்கு விருப்பமான டிசைனை துணியில் வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் நூலைக் கோர்த்து டிசைனின் ஆரம்பத்தில் கீழிருந்து குத்தி மேலே இழுத்துக் கொள்ளுங்கள் . அப்படி இழுத்த நூலை இடது கையால் ஊசிக்கு மிக அருகில் பிடித்துக் கொண்டு நூலை ஊசியில் மூன்று முறை வட்டமாக சுற்றி கொண்டே வர வேண்டும். மூன்று முறை சுற்றி முடித்தவுடன், நூலைக் குத்தி வெளியிழுத்த இடத்திலேயே மறுபடியும் குத்தி விட்டால் உங்களுக்கு ஃப்ரென்ச் நாட் கிடைக்கும்.
அடுத்தது ஆரம்பிக்கும்போது சிறு இடைவெளி விட்டு நூலைத் துணியின் அடியில் இருந்து மேலிழுத்துக் கொள்ளுங்கள். இப்படியே டிசைன் முழுவதும் போட்டு நிரப்புங்கள். கீழே உள்ள டிசைனில் சிவப்பு நிறத்தின் மூன்று விதமான ஷேட் நூல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.