பழைய துணியிலிருந்து மறுபொருள்களை உருவாக்கும் பயிற்சி முகாமை நடத்துகிறது குக்கூ காட்டுப்பள்ளி.
“பிறந்த சிசுவை தாங்குவதற்கு என்றே தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் ஒரு துணியினை பத்திரப்படுத்தும் மரபுவழக்கம் நமக்கிருக்கிறது. அதேசமயம், உலகளாவிய மனோபாவம் ஆடைகளையும் துணிகளையும் அதன் பயன்பாட்டு முடிவுக்கு முன்னமே தூக்கிப் புறமெறியும் போக்கையும் நமக்கு அறிமுகப்படுத்திவிட்டது. நெகிழிக்கு அடுத்து வீதியில் வீசப்படும் குப்பையாக துணிகள் மாறிவிட்ட நிலையில்
பழைய துணியாடைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொவரும் மறுபொருளாக்க பயிற்சிமுகாம் குக்கூ கற்றல் வட்டத்தில் இம்முறை நிகழ்கிறது.
குழந்தைகளின் விளையாட்டுத் தோழமையான பொம்மைகள் தொடங்கி வீட்டில் அவசியப்படும் பயன்பொருட்கள் வரை சில துணிப்பொருட்களை எளிய மடித்தல், தைத்தல் மற்றும் பின்னல் முறைகளின் மூலம் பிள்ளைகள் கற்றுக்கொள்ளப்போகிறார்கள்.
“மனித வாழ்க்கையின் சாரம் தன்னைத்தானே அகத்தாய்வு செய்துகொள்வதும் இயற்கையின் இயல்பில் அமைத்து கொள்வதிலும் தான் இருக்கிறது. அமைதி ஆனந்தத்தின் தொடக்கமும் இதுவே”..
– புத்தர்
ஒளிப்படமும் வடிவமைப்பும் Thiagarajan R