என்னென்ன தேவை?
20 பால் அளவு நூல், குரோஷா ஊசி எண் 0.75
எப்படி செய்வது?
முதலில் எட்டு செயின் பின்னல்களைப் போட்டுக் கொள்ளுங்கள். இறுதியாக போட்ட எட்டாவது செயினை முதல் செயினுடன் இணைத்து டபுள் பின்னல் போடுங்கள். இப்போது இது சிறிய வட்ட வடிவத்திற்கு வந்திருக்கும்.
இந்த வட்ட வடிவத்தை வைத்து, 25 ட்ரிபிள் பின்னல்களைப் போடுங்கள். ட்ரிபிள் பின்னல்களைப் போடும்போது செயின் பின்னல்களால் உருவாக்கிய வட்ட வடிவத்துக்குள்தான் ஊசியை நுழைக்க வேண்டும். செயின் பின்னல்களுக்குள் நுழைக்கக்கூடாது. இந்த வழிமுறைகளில் ட்ரிபிள் பின்னல் போட்டு முடிக்கும்போது, அழகான பின்னல்களால் ஒரு வட்ட வடிவ பூவின் மையப்பகுதி கிடைத்திருக்கும்.
இந்த பூவின் மையப்பகுதியைச் சுற்றி, இதழ்கள் போடுவோம். 25 ட்ரிபிள் பின்னல்களை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். பூவின் மையப் பகுதியைப் போட்டு முடித்த இடத்திலிருந்து தொடர்ந்து எட்டு செயின் பின்னல்களைப் போடுங்கள். செயின் பின்னல்களைப் போட்டு முடித்தவுடன் பூவின் மையப் பகுதியின் ஐந்தாவது ட்ரிபிள் பின்னல் முடியும் இடத்தில், பின்புறமாக டபுள் பின்னல் போட்டு இணையுங்கள். இப்போது ஒரு பூவிதழ் கிடைத்திருக்கும். அடுத்த இதழுக்கு இதேபோல் தொடர்ந்து எட்டு செயின் பின்னல்களைப் போட்டு அடுத்த 10வது ட்ரிபிள் பின்னலின் பின்புறமாக டபுள் பின்னல் போட்டு இணையுங்கள்.
இப்படி ஐந்து இதழுக்கும் செயின் பின்னல்களைப் போட்டு பூவிதழ்களை உண்டாக்குங்கள். அடுத்து, பூவிதழ்களுக்காக போடப்பட்ட இந்த செயின் பின்னல்களுக்குள் ட்பிள் பின்னல்களைப் போட்டு நிரப்புங்கள். இதோ முழுமை பெற்ற பூ தயார். பூக்கள் இன்னும் பெரிதாக வேண்டுமானால்
இதேபோல் எண்ணிக்கையை சரியாக வைத்து செயின் பின்னல்களால் பூவிதழ்களைப் போட்டு, அதில் ட்ரிபிள் பின்னல்களைப் போட்டு நிரப்பலாம்.
இந்த குரோஷா பூக்களை புடவை, துப்பட்டாக்கள். சுரிதார் என நம் கற்பனைக்கேற்ப எதில் வேண்டுமானாலும் வைத்து உடைகளை வடிவமைக்கலாம். அதுபற்றியெல்லாம் அடுத்தடுத்து தெரிந்து கொள்ளப்போகிறோம்.
இந்தப் பதிவைப் படித்தவுடன், என் பாட்டியின் ஞாபகம் ரொம்பவும் வந்தது. என் பாட்டி இந்தக் குரோஷாவில் நிறைய பின்னல் வேலைகள் செய்திருக்கிறார். நீங்கள் சொல்லி உள்ளதைப்போல் வேறு வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் செய்து அவற்றையெல்லாம் குரோஷா பின்னல்களினால் சேர்த்து ரோஜாப்பூ டவல் பண்ணிக் கொடுப்பார்.
ஒரு நல்ல பொழுதுபோக்கு மட்டுமில்லாமல் வருமானம் பெறவும் உதவும் என்று தோன்றுகிறது.
இதிலே ஸ்வெட்டர் பின்ன முடியுமா?
Pls Indra amma address and contact number