ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!

கீதா
கீதா

சென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும்.
சரி.. செய்முறைக்குப் போவோமா?

இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள்.DSCN0922

என்னென்ன தேவை?
கோர்க்கப்படாத பென்டன்ட், தோடு அடங்கிய செட், பென்டன்ட் செட்டுக்கு மேட்சாகும்படியான கிறிஸ்டல் மணிகள், மணி கோர்க்கும் கம்பி, பேசர் பீட்கள், இணைப்பான்கள்

DSCN0925
ஒரு முழம் நீளத்துக்கு மணிகோர்க்கும் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். அதில் பென்டன்ட்டை கோர்க்கவும். பென்டன்டின் இருபுறமும் சம அளவில் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.
DSCN0927
இருபுறமும் கோர்த்து முடித்த பிறகு, ஒரு கம்பி கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு,
DSCN0929
அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.
DSCN0930
இதைப் போலவே அடுத்த பக்கத்தையும் இணையுங்கள். மீதமுள்ள கம்பியை வெட்டி சீர் செய்யுங்கள்.
DSCN0931
இதோ தயாராகிவிட்டது கிறிஸ்டல் பென்டன்ட் செட்!
Advertisements

8 thoughts on “கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!”

    1. சென்னையில் பாரிமுனை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் கோல்டு கவரிங் நகைகள் விற்கும் கடைகள், பேன்ஸி பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகளைத் தாண்டி வந்தால் பெருமாள் முதலி தெரு வரும். அந்தத் தெரு முழுக்க ஃபேஷன் ஜுவல்லரி தொடர்பான மணிகள், செட்கள் எல்லாம் கிடைக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s