
நிதி ஆலோசகர்
மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிக்க பான் கார்டு அவசியம். சில குறிப்பிட்ட ஃபண்டுகளை பான் கார்டு இல்லாமலும் தொடங்க முடியும். பான் கார்டு இருக்கிறவர்கள் நிதி ஆலோசகர்களை அனுகினால் நீங்கள் கேட்கும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பித்துத்தருவார்கள். இதனுடன் KYC எனப்படும் நோ யுவர் கஸ்டமர் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முறைப்படுத்துவதற்காக இந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஆலோசகர்கள் இல்லாமல் நேரடியாகவும் சில இணையதளங்கள் மூலமும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பிக்கலாம். பெரும்பாலாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே நேரடியாக தங்கள் இணையதளம் மூலமாக ஃபண்டுகளை விற்கின்றன. முதல்முறையாக ஆரம்பிக்கும்போது நிதிஆலோசகரின் உதவியை கேட்பது நல்லது.
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அதாவது கல்லூரி படிப்புக்கு, திருமணத்துக்காக மியூச்சுவல் ஃபண்டை தொடங்கும்போது அப்பா அல்லது அம்மாவின் பான் கார்டையே பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளின் பெயரில் தொடங்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுக்கு அப்பா அல்லது அம்மா பாதுகாப்பாலராக செயல்படுவார். குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்போது முழுமையான அதிகாரம் அவர்களுக்கே சென்றுவிடும்.
நீங்கள் எத்தனை ஃபண்ட் ஆரம்பித்திருந்தாலும் மாதமாதம் அந்த ஃபண்டின் இப்போதைய நிலைமை என்ன என்பதை மியூச்சுவல் ஃபண்டுகளை கண்காணித்து முறைப்படுத்தும் CDSL Ventures Limited நிறுவனம் தகவல் அனுப்பிவிடும்.
வங்கிகளில் தொடர் வைப்பு (ரெக்கரிங் டிபாசிட்) திட்டத்தில் சேமிக்கிறோம் இல்லையா, அதுபோல மியூச்சுவல் ஃபண்டில் SIP, நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! அடுத்த வாரம் மியூச்சுவல் ஃபண்டில் SIP என்கிற சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளப்போகிறோம்.
தொடர்க… தெரிந்து கொள்கிறோம்….
தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.
மிகவும் பயனுள்ள தொடர்.
மிக மிக பயனுள்ள அறிவுரைகளூடன் கூடிய பகிர்வு அவசியமான தகவல்களைத் தெரிந்துகொண்டோம் தொடர்க உங்கள் அறிவுரைகள்