சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

வடாம் போடலாம் வாங்க – 5

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம்.  அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள்.
கத்தரிக்காயை  மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள். இது அவசரத்திற்கு குழம்புகளிலும், தாலிலும் போட உதவும். இந்த வற்றல்கள் எல்லாம் கிராம மக்களின் சேகரம்தான். வெண்டைக்காயும் அப்படியே. பாகற்காயை மெல்லிய துண்டங்களாகச் செய்து, உப்பு சேர்த்தத் தயிரில் ஊற வைத்து உலர்த்துவார்கள். மோர் மிளகாய் மாதிரி தயாரிப்பு.  வறுத்துச் சாப்பிட பிரியர்களுக்கு உடனடி தயாரிப்பு. மணத்தக்காளிக் காயையும், இம்மாதிரியே உப்பு, தயிர் சேர்த்து ஊறவைத்துக் காயவைத்துதான் வற்றல் தயாரிப்பது. கொத்தவரைக்காயை வற்றல் செய்யலாம் வாருங்கள். ஸீஸனில் இதே பக்குவத்தில் அவரை, பீன்ஸிலும் செய்ய முடியும்.

வேண்டியவை:
பிஞ்சு கொத்தவரைக்காய் – அரை கிலோ
உப்பு – இரண்டரை டீஸ்பூன்
தயிர் (கெட்டியானது) -1 டீஸ்பூன்

செய்முறை:
கொத்தவரைக்காயை காம்பையும் நுனியையும் நீக்கி நன்றாக அலசி வடிக்கட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 7 கப் தண்ணீரை உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

P1030167

கொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தவரைக்காயைச் சேர்த்துக் கிளறவும்.  ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்தி விட்டு சற்று நேரம் ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.

P1030168

காய்களை வடி தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும். ஆற விடவும்.

P1030169

ஆறின காய்களில் தயிரைச் சேர்த்துக் கலக்கவும். நல்ல வெயிலில் பரவலாகக் காய வைத்து எடுக்கவும்.

P1030170

நன்றாகக் காயும் வரை உலர்த்தி காற்றுப் புகாத டப்பாக்களில் சேமிக்கவும்.கிராமிய வற்றலிது. எண்ணெயில் பொரித்துச் சாப்பிட வேண்டும்.

P1030176

அவரைக்காய் ஸீஸனில் அதிலும், பீன்ஸ் மலிவாகக் கிடைக்கும்போது அதிலும் இம்முறையில் வற்றல் செய்து பாருங்கள். வற்றல் குழம்பிற்கு எத்தனை வற்றல்கள்.?

Advertisements

3 thoughts on “சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்”

  1. காமாக்ஷிமா,

    கொத்தவரங்காய் வத்தல் போடும் முறையும், படங்களும் சூப்பரா இருக்குமா. எப்போதாவது இங்கும் அதிக விலையில் கிடைக்கும். பார்த்தால் வாங்கிவிடுவேன். மிகவும் ருசியான காய். ஊருக்குப் போனால் போட்டு எடுத்து வர முடியுதான்னு பார்க்கிறேன். அன்புடன் சித்ரா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s