கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்… இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே!
உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள் இதோ… கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.
வண்ணக் காகிதத்தில் பென் ஸ்டாண்ட்
நாளிதழ் காகித்தை இப்படி அழகான சுவர் அலங்கார பொருளாக மாற்றலாம்…
குளிர்சாதனப் பெட்டியில் ஒட்ட விதவித வடிவங்களில் காந்தங்களை செய்து பாருங்கள்..
டைனோசர் செய்து பார்க்கலாமே
நல்ல அருமையான கை வேலைகள். குழந்தைகள் நிச்சயம் ஆர்வமுடன் செய்வார்கள். பாராட்டுக்கள்!