நந்தினி சண்முகசுந்தரம்
நம்முடைய சமூகத்தில் ஏழை, நடுத்தர, பணக்கார என எந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சுயமான அடையாளம் என்பது மறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கான சுய அடையாளம் என்பது அவளுடைய பொருளாதார சுதந்திரத்திலிருந்தே தொடங்குகிறது. பொருளாதார சுதந்திரத்தின் மூலம் சுய அடையாளத்தை அடைந்த வீணா -சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதையை ‘செய்து பாருங்கள்’ முதல் இதழில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறோம்.
வீணா சுனிதா சகோதரிகளை நான் சந்தித்தது மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை சி.பி. ஆர்ட் கேலரியில் நடந்த பெண்கள் தின கண்காட்சியின் போது. அவர்களை மீண்டும் ஒரு நாள் சந்திப்பேன் என்கிற உறுதி என்னிடம் இருந்தது. அவர்களுடைய ஈர்க்கும் பேச்சும், அணுகுமுறையுமே இதற்குக் காரணம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு, விசிட்டிங் கார்டில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டேன். ‘ஹலோ’ சொன்னார் வீணா. ‘நிச்சயம் சந்திப்போம், வாருங்கள்’ என்றார். இளம் வெயில் தொடங்கியிருந்த ஒரு பொழுதில் அவர்களுடைய கடைக்குச் சென்றேன். என்னை வரவேற்றவர் சுனிதா. ஏற்கனவே பழகியவர்போல வரவேற்றார் சுனிதா. வீணா-சுனிதா சகோதரிகள் வரவேற்ற விதம் பற்றி ஒரு பத்தி அளவுக்கு எழுத வேண்டுமா என யோசிக்கலாம். ஆம்…ஒரு தொழிலை நடத்த திறமை மட்டுமல்ல, தொடர்பு எண்ணை மாற்றாமல் பராமரிப்பது முதல் கொண்டு, தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் பேசுவதும் முக்கியம்தான்.
உண்மையில் வீணா – சுனிதா சகோதரிகளை சந்தித்ததன் மூலம் நான் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். முடிந்தவரையில் அதை எழுதிவிட முயற்சித்திருக்கிறேன். அசாதாரண சூழ்நிலையில் சுடிதார் விற்பனை என தொழிலைத் தொடங்கி அதன் மேடு பள்ளங்களைக் கடந்து வெற்றிகரமாக இன்று பாரம்பரிய உடைகளை வடிவமைத்து தருபவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் இந்த சகோதரிகள்… அசாதாரண சூழ்நிலையிலிருந்து தொழில் ஆரம்பித்த பின்னணியை சொன்னார் வீணா…
முழுகட்டுரையும் ‘செய்து பாருங்கள்’ இதழில் படிக்கலாம்.
இதழைப் பெற
S. Nandhini
A/C NO: 602263423 (Indian Bank)
IFS Code IDIB000K071
என்ற கணக்கில் ரூ. 150ஐச் செலுத்தி,
mvnandhini84@gmail.com மற்றும்
seithupaarungal@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். நேரடியாக வாசகர்களுக்கு இதழை தருவதால் தபால் செலவை நாங்களே ஏற்கிறோம்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக் ரூ. 50 ஐ அனுப்பவேண்டும்.
சந்தாவும் செலுத்தலாம்!
ஓராண்டு சந்தா ரூ. 500 (நான்கு இதழ்கள்)
வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 700 (நான்கு இதழ்கள்)
சென்னையில் இதழ் கிடைக்கும் இடங்கள்:
T. Nagar
New Booklands
52-c basement,
North usman road,
Near GRT jewellers car parking,
T. Nagar, Chennai – 17.
Ph: 044-28158171 / 28156006
K. K. Nagar
Discovery Book Palace
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai – 600078
Tamil Nadu, India.
(Near Pondichery Guest house)
Ph: +91 44 65157525 , Cell +91 9940446650
Thiruvanmiyur
Panuval Bookstore 112,
Thiruvalluvar Salai,
Thiruvanmiyur (Near Jayanthi Signal).
Chennai – 41.
mob: +91 97890 09666