பொதுவாக பருப்பு உருண்டை குழம்பு செய்யும்போது பருப்பு உருண்டைகளை ஆவியில் வேக வைப்போம் அல்லது எண்ணெயில் பொரித்தெடுப்போம். அப்படி செய்யாமலேயே நேரடியாக குழம்பில் பருப்பு உருண்டைகளை போட்டு குழம்பு செய்யலாம். அது உடையாமல் முழு உருண்டைகளாக குழம்பில் மிதக்கும். இதை எளிமையாக சொல்லித்தருகிறார் விஜயலட்சுமி.