சிறப்பு கட்டுரைகள்

ஆடு தாண்டும் காவிரி!

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா
ஜி. விஜயபத்மா

“எனக்கும் காவிரிக்குமான உறவு” மிகவும் ஆத்மார்த்தமானது. என் அப்பாவின் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் மாயவரம் பக்கத்தில் உள்ள சின்னகிராமம் “செம்போன்னார் கோவில்”. அந்த சின்ன கிராமத்தில் மெயின்ரோடில் ஆரம்பிக்கும் வீடு முடியும் இடம் காவிரி ஆற்றில்.! காவிரி ஆற்றை ஒட்டி எங்கள் வயல்கள். அதாவது எங்கள் தோட்டத்தில் ஓடுகிறது காவேரி. சொல்லும்போதே எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில் எங்கள் தோட்டத்தில் ஓடும் காவிரியின் குறுக்கு வெட்டு இரண்டறை அடி வாய்க்கால் அளவுதான் இருக்கும். இலக்கியத்தில் கூட “ஆடு தாண்டும் காவேரி” என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். பள்ளி நாட்களில் தோட்டத்தில் ஓடும் காவிரியை ஒட்டி சொப்பு சாமான்கள் வைத்து விளையாடுவது அவ்வளவு சுவாரசியம்.

எங்கள் தாத்தா காவிரியைப் பற்றிய கதையை மிக சுவாரசியமாக சொல்வார். காவிரி பிறக்கும் தலைக் காவேரி” க்கு எங்கள் பள்ளியில் சுற்றுலா அழைத்து சென்றார்கள். சின்னத் தொட்டி க்குள் காவிரி குழந்தையாய் இருந்தது. நம் ஊரில் உள்ள காவிரிக் கால்வாயையும், தலைக்காவேரியும் பார்த்து விட்டு ஓ..காவிரி யாறு குட்டியாத்தான் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பிறகு கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்கையில் எனக்கு காண்பிக்கப்பட்ட காவேரி பார்த்து ஆனந்தத்தில் மூச்சு திணறியது. ஐயோ..தலைக்கனமே இல்லாமல் பிறந்து, குழந்தையைப்போல் தவழ்ந்து சென்று அமைதியாய் காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கடக்கும் காவேரி உண்மையில் எவ்வளவு பலமும் பராக்கிரமும் வாய்ந்தது என்ற பிரமிப்பு இன்றும் என்னுள் அடங்கவில்லை.

நயாகாரா நீர்வீழ்ச்சியின் அருகே படகு போகையில் அந்த பிரமாண்ட நீர்வீழ்ச்சியின் சாரல் துளிகள் என்மேல் தெறிக்கையில் என்னையும் அறியாமல் கண்மூடி அந்த சிலிர்ப்பை ரசிக்கும்போது அகண்ட காவிரி தந்த சிலிர்ப்பை பெரிதாக உணர்ந்தேன். எங்கள் காவேரியில் உண்மையும்,அன்பும் இரத்த சம்பந்தங்களும் கலந்து இருக்கின்றன. காவேரி என்பது அம்மா ஊட்டும் நிலாச்சோறு. நயாகரா என்பது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் பஃபே பார்ட்டி. நயாகராவும் அழகுதான். ஆனால் கவர்ச்சியான அழகு. காவேரி எங்கள் கருவாச்சி காவியம். எங்கள் இந்தியத் தாயின் அழகுமகள் காவேரி. புருஷனுக்கும், பெற்றோர்களுக்குமிடையில் உள்ள ஈகோவில் பாசப்பரிதவிப்பில் முடிவெடுக்கத் தெரியாமல் ஊமை அழுகையுடன் வாழ்க்கை நடத்தும் பெண்ணாக வாழ்கிறாள். நாம் காவிரியை கண்கலங்க வைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் வேதனை.

ஜி. விஜயபத்மா, எழுத்தாளர்; இயக்குனர்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s