எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் குறித்தான பதிவுகளை காத்திரமாக பதிவு செய்து வருகிறார். அவரிடம் நாம் உரையாடியதன் சிறு பகுதி இங்கே. அடுத்தடுத்த பதிவுகள் விரைவில் வெளியாகும்.
தொழிற்நுட்பங்களும் பெண்களுக்கான சுதந்திரமும் அதிகரித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் இந்தக் காலக்கட்டத்தில் உண்மையில் பெண்களின் நிலை என்ன? இதற்கான பதிலைத் தருகிறார் பா. ஜீவசுந்தரி.