தேவையானவை :
அவல் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
சோள-மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து, கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்யவும்.
சோளமாவைக் கரைத்து, கட்லெட்டுகளை மாவில் தோய்த்து எடுத்து, அவல் பொடியில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.