தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை – 2 கப்
வெல்லம் – அரை கப்
ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்
அரிசி மாவு – சிறிது.
செய்வது எப்படி?
வேர்க்கடலையை சுத்தம் செய்து, தோல் நீக்கிக்கொள்ளுங்கள். வெல்லத்தைப் பொடித்து, கால் கப் தண்ணீர் சேர்த்து, முன் சொன்ன முறையில் பாகு வைத்துக்கொள்ளுங்கள். கடலையைப் பாகில் கொட்டி, ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி கடலை உருண்டைகளைப் பிடியுங்கள். சூடு தாங்க முடியாதவர்கள், அரிசிமாவு தொட்டுக்கொண்டு உருட்டலாம். முதலில், வேகவேகமாக உருண்டையை அது வரும் வடிவத்தில் பிடித்துப் போட்டுவிட்டு, பின்னர், அழுத்தி உருண்டை பிடிக்கலாம். அப்போது இறுகி, வடிவம் நன்கு வரும்.
குழ்ந்தைகளுக்கான கடலை உருண்டை மிகவும் அருமை